தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

பைக் மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வேற லெவல் ஸ்டைலுக்கு மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

அனைத்து வயதினருக்கும் பிடித்தமான பைக்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. ஏன், இந்நிறுவனத்தின் சில பைக்குகளுக்கு இளம் பெண்கள்கூட வசியப்பட்டிருக்கின்றனர். இதற்கு இந்த பைக்கின் அட்டகாசமான தோற்றமும், நீடித்து உழைக்கும் திறனுமே முக்கிய காரணமாக உள்ளது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இந்நிலையில், இந்நிறுவனத்தின் கிளாசிக்350 என்னும் புகழ்வாய்ந்த மாடலை கூடுதல் மெருகேற்றியிருக்கின்றது "கன்ஸ் அண்ட் ஹோசஸ்" (Guns and Hoses), என்ற பைக் கஸ்டமைசேஷன் நிறுவனம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் வெகு நீண்ட காலமாக வாகன மாடிஃபிகேஷன் பணியை மேற்கொண்டு வருகின்றது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இந்நிறுவனம் வாகனத்தை மாடிஃபை செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் புதுவிதமான லுக்கை வழங்கும் வகையில் பெயிண்டிங்கையும் கொடுத்து வருகின்றது. இதனடிப்படையிலேயே 2014ம் ஆண்டு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை அது பெயிண்டிங் மாடிஃபை செய்துள்ளது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

தனித்துவமான பெயிண்டிங்கால் கூடுதல் கவர்ச்சியான மாடலாக மாற்றப்பட்டிருக்கும் அந்த பைக்கிற்கு அந்நிறுவனம் டம்பா (TAMBA) என்ற பெயரை வைத்துள்ளது. நிற மாற்றம் மட்டுமின்றி உருமாற்றத்தையும் அந்நிறுவனம் கிளாசிக் 350 பைக்கிற்கு கொடுத்துள்ளது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இதன்படி, புதிய நிறமாக கிளாசிக் 350 பைக்கிற்கு காப்பர் மெட்டல் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைக் கவரும் இந்நிறம் பைக்கின் பெட்ரோல் டேங்க், பிரேக் லிவர், சைலென்சர் ஷீல்ட் மற்றும் பக்கவாட்டு பெயர் உள்ளிட்டவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பைக்கிற்கு கொடுக்கப்பட்ட சில பாக மாற்ற வேலையால் கிளாசிக் 350 பைக் ஸ்ட்ரீட் க்ரூஸர் ரக பைக்காக மாறியிருக்கின்றது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இதற்காக பைக்கின் இருக்கை, சைலென்சர் மற்றும் வீல்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, இருக்கை முற்றிலுமாக மாற்றப்பட்டு ஸ்ட்ரீட் க்ரூஸர் பைக்கில் காணப்படுவதைப் போன்ற ஸ்பிரிங் வைத்த இரு தனி இருக்கைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இதில், பின்னிருக்கைக்கு மட்டும் சாய்ந்துகொள்வதற்காக ஏதுவான அமைப்பைப் பெற்றிருக்கின்றது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

தொடர்ந்து, பைக்கின் உயரமும் லேசாக அட்ஜெஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற அதிரடி மாற்றங்களால் இந்த பைக் பழங்கால கஸ்டமைஸ் க்ரூஸர் லுக்கையும் லேசாக பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, இந்த சிறப்பான பெயிண்டிங்கிற்காக புற ஊதா கதிர் கோட்டிங்கையும் மாடிஃபிகேஷன் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. எனவே, இந்த பைக்கின் பெயிண்டிங் அவ்வளவு எளிதில் வெயில் காரணமாக சிதிலமடையாது என தெரிகின்றது.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இந்த பெயிண்டிங் வேலையைத் தொடர்ந்து கிளாசிக் 350 டம்பா பைக்கில் மறு டிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹெட்லேம்ப் மாடர்ன் லுக்கில் காணப்படுகின்றது. இது எளிதில் கிராஷ் ஆய்விட கூடாது என்பதற்காக குவார்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

பெயிண்டிங் மற்றும் அணிகலன் மாற்றத்தைத் தவிர எஞ்ஜினில் எந்தவொரு மாற்றத்தையும் இந்த பைக் பெறவில்லை. எனவே, கிளாசிக் 350 பைக்கில் காணப்படும் அதே 346சிசி எஞ்ஜின்தான் இதில் காணப்படுகின்றது. இது ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19.8 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் உதவும்.

தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்... ஹீரோயின்களின் கவர்ச்சிக்கே செம்ம டஃப்...

இந்த தரமான மாற்றத்திற்கு எவ்வளவு செலவாகியிருக்கின்றது என்பதுகுறித்த தகவலை மாடிஃபிகேஷன் நிறுவனம் வெளியிடவில்லை. எனவே எங்களால் அதிகாரப்பூர்வமாக அதுகுறித்த தகவலை வழங்க முடியவில்லை.

Image Courtesy: Guns and Hoses - Custom Paint Studio/Facebook

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 Modified Into Street Cruiser Motorcycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X