ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்காக கருப்பு நிறத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிளாசிக்500 பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த லிமிட்டட் வெர்சன் பைக்கின் அறிமுகம் வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

இந்த புதிய கிளாசிக் 500 பைக்கை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் புதிய ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரித்துள்ளது. 499சிசி என்ஜினை பெற்றுள்ள இந்த லிமிட்டட் வெர்சன் பைக் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவில்லை.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

இதனால் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் பிஎஸ்4 வெர்சனில் தான் இருக்கும். பிப்ரவரி 10 முதல் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள இந்த கிளாசிக் 500 பைக்கை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் 'தி லாஸ்ட் ஆஃப் தி 500' என்ற பெயரில் அழைத்து வருகிறது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. மேலும் இந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், இந்த ஸ்பெஷல் எடிசன் வெறும் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

சென்னை திருவொற்றியூர் ராயல் எண்ட்பீல்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய கிளாசிக் 500 பைக்கில் கருப்பு பெயிண்ட் அமைப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் ஹெட்லைட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

ஹெட்லைட் மட்டுமின்றி, முன்புறம் மற்றும் பின்புற ஃபெண்டர்களிலும், எரிபொருள் டேங்கிலும் மற்றும் சக்கரங்களின் ரிம்களிலும் ஆரஞ்ச் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 499சிசி, ஃபூல் இன்ஜெக்டட், 4-ஸ்ட்ரோக், ட்வின்-ஸ்பார்க் என்ஜின் 5,250 ஆர்பிஎம்-ல் 27.2 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 41.3 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் நேற்று தான் கிளாசிக்500 பைக் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவித்தது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

கடந்த 2019ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிகவும் கடினமான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதற்கு முந்தைய 2018-ல் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்து வந்த இந்நிறுவனத்தின் பிரபலமான பைக் மாடலான கிளாசிக் 350 பெரிய அளவில் எந்த விற்பனை பதிவையும் கடந்த ஆண்டில் கொண்டிருக்கவில்லை.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

இன்னும் இரு மாதங்களில் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அமலாகவுள்ளது. இதற்கிடையில் தனது பெரும்பாலான விற்பனை மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி அறிமுகம் செய்ய ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடைசி 500சிசி பைக்... இத்துடன் விற்பனை நிறுத்தம்...!

இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதால், இந்நிறுவனத்தின் பிஎஸ்6 பைக்குகள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி வருகின்றன. இந்த வகையில் பிஎஸ்6 தரத்தில் கிளாசிக் 350 மாடல் சில நாட்களுக்கு முன் அறிமுகமாகி, தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Limited Edition Royal Enfield Classic 500 Tribute Black
Story first published: Saturday, February 1, 2020, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X