பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

தன்னுடைய பைக்கை அலங்காரம் செய்து அழுகுபார்க்க எண்ணிய இளைஞர் ஒருவர் அதற்காக பல லட்சங்களை வாரி இறைத்திருக்கின்றார். அதுகுறித்த தகவலை தொடர்ந்து பார்க்கலாம்.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர் பைக்குகளில் ஒன்றான கான்டினென்டல் ஜிடி 650 பைக் பெரும் தொகையில் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த பைக்கின் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவினை அஷ்வின் சிங் தக்கியர் எனும் யுட்யூப் சேனில் வெளியிடப்பட்டுள்ளது.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

ராயல் எனஃபீல்டு நிறுவனம் கடந்த ஆண்டுதான் இரட்டையர் ரகத்தில் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. குறைந்த விலையில் இரட்டை சிலிண்டர்களைக் கொண்ட இருசக்கர வாகனம் என்பதால், இந்த பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிற இருசக்கர வாகனங்களைப் போலவே அதிக நாட்கள் காத்திருப்பு காலத்தை இந்த இரட்டையர்களும் பெற்றன. இதில், கான்டினென்டல் ஜிடி650 ஓர் கஃபே ரேஸர் ரகமாகும். இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையிலேயே அதன் உரிமையாளர் அப்பைக்கை பெரும் பொருட் செலவில் அலங்கரித்திருக்கின்றனர்.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

இதற்காக அவர் செய்த ஒட்டுமொத்தமா ரூ. 2.83 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கான்டினென்டல் ஜிடி 650 மாடல் பைக்கின் விலை ரூ. 3,05,000 ஆகும். இது ஆன் ரோடு விலையாகும். பெரும்பாலான அணிகலன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

இதனாலயே இத்தகைய அதிகபட்ச விலையை புதிய அணிகலன்கள் பைக்கில் சேர்த்தற்கு உருவாகியுள்ளது. ஆகவே, ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 பைக்கின் மதிப்பும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த மதிப்புயர்விற்கு காரணமாக இருக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட அணிகலன்களைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் பத்துக்கும் மேற்பட்ட புதிய அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக முன்பக்க அப்-சைட் டவுன் ஸ்போர்க்குகள் இருக்கின்றன. ஏனெனில், இதன் விலை மட்டுமே ரூ. 61 ஆயிரமாக உள்ளது. இதுதான் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகலனிலேயே அதிக விலைக் கொண்ட அம்சமாகும்.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் இந்த மாதிரியான சஸ்பென்ஷனே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ராயல் என்பீல்டு பைக்கிற்கு மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, டிஸ்க் தட்டு மற்றும் காலிபர்கள் உள்ளிட்டவையும் கேடிஎம் பைக்குகளில் இருப்பதைப் போன்றே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

இதைத்தொடர்ந்து, ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் காணப்படுவதைப் போன்று ஹெட்லேம்ப் மாற்றப்பட்டிருக்கின்றது. இத்துடன் வழக்கமான பிரேக் லிவர் நீக்கப்பட்டு பிரெம்போ யூனிட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, பழைய ஓடோமீட்டர் அகற்றப்பட்டு அனலாக் கிளஸ்டர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு அம்சமும் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

அதில், பைக்கின் டயர், ஸ்பிராக்கெட்ஸ் மற்றும் ஹேண்டில் பார்கள் உள்ளிட்டவையும் அடங்கும். மேலும், தோற்றத்தில் மட்டுமின்றி சாலையில் ஆக்ரஷமாக சீறிப் பாய்வதற்கு ஏற்பவும் எஞ்ஜினில் ட்யூன்-அப் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பைக் தற்போது கூடுதலாக 8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதற்கேற்ப ஆஃப்-ரோடு பயன்பாட்டு டயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

இதுகுறித்து தெளிவாக விளக்கும் அனைத்து மாற்றங்கள் மற்றும் அவற்றின் விலைத் தொகுப்பை அந்த இளைஞர் புகைப்படம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

பைக்கை அலங்காரம் செய்து அழகு பார்த்த இளைஞர்... இதுக்காக இத்தனை லட்சங்களையா வாரி இறைக்குறது?

இப்படத்தின் மூலம் பைக்கின் ஏர் ஃபில்டர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது மற்றும் சைலென்சர் பழுப்பை மூடியிருப்பதையும் (wrap) உங்களால் காண முடியும். இவ்வாறு அனைத்து விஷயத்திலும் அந்த இளைஞர் தனது கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை மாற்றியிருக்கின்றார்.

இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமான கூலியாக வேலை ஆட்களுக்கு ரூ. 37 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இது சற்று அதிகமாக காணப்பட்டாலும் கடின உழைப்பை பணியாளர்கள் வழங்கியிருப்பதான் காரணத்தினாலும், சில மெனக்கெடுதலை அவர்கள் செய்திருப்பதாலும் இந்தளவிற்கு ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Royal Enfield Continental GT 650 Has Modifications Worth Rs. 2.83 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X