இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

அமெரிக்காவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ்ட் நிறுவனமான சோசா மெட்டல்வொர்க்ஸ், ராயல் எண்ட்பீல்டு காண்டினெண்டல் 650 பைக் மாடலை ஹாலிவுட் படங்களில் கூட பயன்படுத்தக்கூடிய அளவிற்கு மாற்றியமைத்துள்ளது. இந்த மாடிஃபைடு பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

லாஸ் வேகாஸை சேர்ந்த கமலா என மற்றொரு பெயரை கொண்ட இந்த கஸ்டம் நிறுவனத்தால் முழுவதுமாக தனது தோற்றத்தை இழந்துள்ள இந்த 650சிசி பைக் மாறாக கவர்ச்சிகரமான ஹார்ட்டெயில் ஸ்டைல் தோற்றத்தை ஏற்றுள்ளது.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

இந்த மாடிஃபைடு பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பான்மையான பாகங்கள் சந்தையில் கிடைக்காதவை ஆகவும், ஒரு சில பாகங்கள் அரிதாக கிடைக்கக்கூடியவை ஆகவும் உள்ளன. இருப்பினும் சோசா மெட்டல்வொர்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள கஸ்டம் சேசிஸ் வழக்கமான சேசிஸ் உடன் கிட்டத்தட்ட ஒத்து போகிறது.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

முன்புறத்தில் கஸ்டமைஸ்ட் சஸ்பென்ஷனை பெற்றுள்ள இந்த பைக்கில் பின்புறத்தில் சஸ்பென்ஷன் அமைப்பே வழங்கப்படவில்லை. இதனால் மொத்த அப்சார்ஷனையும் முன்புற செட்அப் தான் கையாளுகிறது.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

அதேநேரம் முன்புற ப்ரேக்குகளை கஸ்டம் நிறுவனம் பைக்கின் பின் சக்கரத்தில் பொருத்தியுள்ளது. எக்ஸாஸ்ட் அமைப்பில் நறுக்கப்பட்ட ஸ்டோக் ஹெட்டர் குழாய்களும், பைக்கின் மொத்த தோற்றத்திற்கு ஏற்றப்படியான போல்ட்கள் பெட்ரோல் டேங்கிலும் இந்த மாடிஃபைடு 650ஜிடி பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

பைக்கில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயமாக ஒற்றை இருக்கை அமைப்பு குஷின் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்கள், டெயில்லைட், டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் இந்த கஸ்டம் பைக்கில் இல்லை.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

வழக்கமான ராயல் எண்ட்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 648சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

இந்திய எக்ஸ்ஷோருமில் ரூ.2.81 லட்சத்தில் இருந்து ரூ.3.02 லட்சம் வரையில் விலையினை கொண்டுள்ள ராயல் எண்ட்பீல்டின் காண்டினெண்டல் 650சிசி பைக்கிற்கு சந்தையில் கவாஸாகி இசட்650, கவாஸாகி வெர்ஸஸ் 650, சுசுகி வி-ஸ்ட்ரோம் 650 மற்றும் ராயல் எண்ட்பீல்டின் மற்றொரு 650சிசி பைக் மாடலான இண்டர்செப்டர் 650 உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக உள்ளன.

கமலா கஸ்டம்வொர்க்ஸ் அமெரிக்காவின் லாஸ் வேகான் மாகாணத்தில் பிரபலமான கஸ்டமைஸ்ட் நிறுவனமாக இருப்பதற்கான காரணம் இந்த மாடிஃபைடு பைக்கை பார்த்தாலே தெரிய வருகிறது. ஏனெனில் இவ்வாறான தோற்றத்திற்கு ராயல் எண்ட்பீல்டு பைக்கை மாடிஃபைடு செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

Most Read Articles
English summary
Kamala The Custom Continental GT 650 By Sosa Metalworks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X