Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவத்தால்.. பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ரத்து
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா?
200 சிசி - 500 சிசி மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

200 சிசி - 500 சிசி மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம், இந்த செக்மெண்ட் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் உள்ள பெரும்பாலான பைக்குகள், விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளன.

200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில், கடந்த அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 79,203 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 7.62 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த ஆண்டு இதே மாதம் இந்த செக்மெண்ட்டில் 73,598 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், இந்த செக்மெண்ட்டில் மொத்தம் 67,220 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன்பின் வந்த அக்டோபரில் இந்த எண்ணிக்கை, 79,203 ஆக உயர்ந்துள்ளது. இது 17.83 சதவீத வளர்ச்சியாகும்.

200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 41,953 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 38,936 ஆக மட்டுமே இருந்தது. இது 7.75 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை புல்லட் 350 பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் ராயல் என்பீல்டு நிறுவனம் 11,203 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 15,454 ஆக இருந்தது. இது 27.51 சதவீத வீழ்ச்சியாகும்.

மூன்றாவது இடத்தை பஜாஜ் பல்சர் 220 பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் பஜாஜ் நிறுவனம் 7,238 பல்சர் 220 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை, 7,758 ஆக இருந்தது. இது 6.70 சதவீத வீழ்ச்சியாகும். நான்காவது இடத்தை ராயல் என்பீல்டு எலெக்ட்ரா 350 பிடித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 6,405 எலெக்ட்ரா 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 5,613 ஆக மட்டுமே இருந்தது. இது 14.11 சதவீத வளர்ச்சியாகும். 5வது இடத்தை பஜாஜ் டோமினார் 400 பெற்றுள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் பஜாஜ் நிறுவனம் 1,818 டோமினார் 400 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 806 ஆக மட்டுமே இருந்தது. இது 125.56 சதவீத வளர்ச்சியாகும். 6வது இடத்தை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில், ராயல் என்பீல்டு நிறுவனம் 1,791 ஹிமாலயன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,172 ஆக மட்டுமே இருந்தது. இது 52.82 சதவீத வளர்ச்சியாகும்.

7வது இடத்தை பஜாஜ் டோமினார் 250 பெற்றுள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் பஜாஜ் நிறுவனம் 1,750 டோமினார் 250 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. பஜாஜ் நிறுவனம் டோமினார் 250 பைக்கை நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

இந்த பட்டியலில் 8வது இடத்தை பஜாஜ் அவென்ஜர் 220 பிடித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 1,565 அவென்ஜர் 220 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,453 ஆக இருந்தது. இது 7.71 சதவீத வளர்ச்சியாகும். ஒன்பதாவது இடத்தை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 1,290 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது புத்தம் புதிய பைக் ஆகும். சமீபத்தில்தான் ஹைனெஸ் சிபி350 பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. எனவே கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை கேடிஎம் 390 பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1,038 கேடிஎம் 390 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 361 ஆக மட்டுமே இருந்தது. இது 187.53 சதவீத வளர்ச்சியாகும். டாப்-10 பட்டியலில் உள்ள பெரும்பாலான பைக்குகள் கடந்த அக்டோபர் மாதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில், கிளாசிக் 350, புல்லட் 350, எலெக்ட்ரா 350 மற்றும் ஹிமாலயன் உள்ளிட்ட பைக்குகளின் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கு அடுத்தபடியாக பல்சர் 220, அவென்ஜர் 220, டோமினார் 250 மற்றும் டோமினார் 400 உள்ளிட்ட பைக்குகளின் மூலம் பஜாஜ் நிறுவனமும் ஆதிக்கம் செலுத்துகிறது.