நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...! முழு விபரம் உள்ளே

நாஷிக்கை சேர்ந்த ஒர்னிதோப்டர் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா 350 மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாற்றி வடிவமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

புதிய தோற்றத்தால் கார்கில் என்ற புதிய பெயரை பெற்றுள்ள இந்த 350சிசி பைக் இந்திய ராணுவ அதிகாரி ஒருவருக்காக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட்டில் பைக் முழுவதும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

மேலும் எரிபொருள் டேங்கில் ராணுவ வீரர்களின் நிழல் போன்ற டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இந்த ராயல் எண்ட்பீல்டு பைக் எல்இடியில் ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்பை கொண்டுள்ளது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் ஹேண்டில் கைப்பிடிக்கு கீழ்புறமாக மாற்றி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இருக்கையும் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், தனியாக பயணம் செய்யும்போது ரைடிங்கால் வரும் முதுகுவலியை தடுக்க முடியும்.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

பைக் மிகவும் விலையுயர்ந்ததாக காட்சியளிக்கும் வகையில் காற்று சுத்திகரிப்பான், டூல் கிட் மற்றும் ஃப்யூஸஸ் உள்ளிட்டவற்றை அடக்கிய பக்கவாட்டு பெட்டகம் ரீ-டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பெட்டகத்தின் மேற்புறத்தில் தான் இந்த ராயல் எண்ட்பீல்டு பைக்கிற்கு புதியதாக சூட்டப்பட்ட கார்கில் என்ற பெயரின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

சைலன்ஸர் வழக்கமான மஃப்லரில் இருந்து பீரங்கி துப்பாக்கி வடிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் சத்தம் வழக்கமான சத்தத்தில் இருந்து கண்டிப்பாக மாறுப்பட்டு இருக்கும். இந்த பைக் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் விதமாக ஒர்னிதோப்டர் நிறுவனம் தனது பெயரை பைக்கின் பின்புற ஃபெண்டரில் பொருத்தியுள்ளது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா பைக் கொண்டுள்ள 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் என்ஜினை இந்த கஸ்டமைஸ்ட் பைக்கும் பெற்றுள்ளது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

இந்த என்ஜின் எலக்ட்ரா பைக்கிற்கு அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றத்திற்கு ரூ.90,000 செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கை பெறவுள்ள ராணுவ அதிகாரியின் பெயர் Lt.ஆகாஷ் ஜெண்டே என கூறப்படுகிறது.

நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...!

ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா பைக்கை இதுபோன்ற ஸ்டைலான கஸ்டமைஸ்ட் டிசைனில் பார்ப்பது அரிது தான். இதன் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் கவர்ந்திழுக்கும் வகையிலான இதன் பெயிண்ட் என மொத்தமாக ஒர்னிதோப்டர் நிறுவனம் தனது சவாலில் வெற்றியடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Image Courtesy: Ornithopter/Facebook

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal Enfield Electra 350 Modified By Ornithopter Moto Design: Renamed KARGIL
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X