Just In
- 1 hr ago டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- 2 hrs ago ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
- 4 hrs ago வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
- 9 hrs ago இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
Don't Miss!
- Movies என்னையே செலக்ட் செய்திருக்கிறாரே.. அவர் டேஸ்ட் எப்படி இருக்கும்?.. கணவர் பற்றி லட்சுமி ஓபன் டாக்
- Technology செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- News திண்டுக்கல்: மலைக்கோட்டை மாநகரில் மலையேறப் போகும் கூட்டணி கட்சி எது? போராடும் சிபிஎம், எஸ்டிபிஐ!
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
நம்புங்கள் உண்மையில் இது ராயல் எண்ட்பீல்டு பைக் தான்...! முழு விபரம் உள்ளே
நாஷிக்கை சேர்ந்த ஒர்னிதோப்டர் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா 350 மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாற்றி வடிவமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
புதிய தோற்றத்தால் கார்கில் என்ற புதிய பெயரை பெற்றுள்ள இந்த 350சிசி பைக் இந்திய ராணுவ அதிகாரி ஒருவருக்காக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட்டில் பைக் முழுவதும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருள் டேங்கில் ராணுவ வீரர்களின் நிழல் போன்ற டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இந்த ராயல் எண்ட்பீல்டு பைக் எல்இடியில் ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்பை கொண்டுள்ளது.
தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் ஹேண்டில் கைப்பிடிக்கு கீழ்புறமாக மாற்றி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இருக்கையும் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், தனியாக பயணம் செய்யும்போது ரைடிங்கால் வரும் முதுகுவலியை தடுக்க முடியும்.
பைக் மிகவும் விலையுயர்ந்ததாக காட்சியளிக்கும் வகையில் காற்று சுத்திகரிப்பான், டூல் கிட் மற்றும் ஃப்யூஸஸ் உள்ளிட்டவற்றை அடக்கிய பக்கவாட்டு பெட்டகம் ரீ-டிசைனில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பெட்டகத்தின் மேற்புறத்தில் தான் இந்த ராயல் எண்ட்பீல்டு பைக்கிற்கு புதியதாக சூட்டப்பட்ட கார்கில் என்ற பெயரின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.
சைலன்ஸர் வழக்கமான மஃப்லரில் இருந்து பீரங்கி துப்பாக்கி வடிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் சத்தம் வழக்கமான சத்தத்தில் இருந்து கண்டிப்பாக மாறுப்பட்டு இருக்கும். இந்த பைக் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் விதமாக ஒர்னிதோப்டர் நிறுவனம் தனது பெயரை பைக்கின் பின்புற ஃபெண்டரில் பொருத்தியுள்ளது.
மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா பைக் கொண்டுள்ள 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் என்ஜினை இந்த கஸ்டமைஸ்ட் பைக்கும் பெற்றுள்ளது.
இந்த என்ஜின் எலக்ட்ரா பைக்கிற்கு அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றத்திற்கு ரூ.90,000 செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கை பெறவுள்ள ராணுவ அதிகாரியின் பெயர் Lt.ஆகாஷ் ஜெண்டே என கூறப்படுகிறது.
ராயல் எண்ட்பீல்டு எலக்ட்ரா பைக்கை இதுபோன்ற ஸ்டைலான கஸ்டமைஸ்ட் டிசைனில் பார்ப்பது அரிது தான். இதன் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் கவர்ந்திழுக்கும் வகையிலான இதன் பெயிண்ட் என மொத்தமாக ஒர்னிதோப்டர் நிறுவனம் தனது சவாலில் வெற்றியடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Image Courtesy: Ornithopter/Facebook