பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்ளோனு தெரியுமா?..

இந்தியர்களின் மிகவும் பிரியமான பைக்கொன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் மிக அதிக விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்தியர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் ஒன்று. நாட்டின் பாரம்பரியமிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இது, இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் அதன் புகழ்வாய்ந்த தயாரிப்புகளை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

அந்தவகையில், இந்திய இளைஞர்களின் மிகவும் பிடித்தமான இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் பிஎஸ்6 தர இருசக்கர வாகனம் ஆகும்.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த புதிய தரத்திலான மோட்டார்சைக்கிளுக்கு அந்நாட்டு பிலிப்பைன் நாட்டு பிஎச்பி மதிப்பில் 299,000 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 4.51 லட்சங்கள் ஆகும். இது, இந்தியாவில் இப்பைக் விற்பனையாவதைக் காட்டிலும் மிக மிக அதிக விலையாகும்.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மிக சமீபத்தில்தான் ஹிமாலயன் பைக்கின் விலையைக் கணிசமாக உயர்த்தியது. அப்போதும்கூட அந்த விலையுயர்வு இரண்டு லட்ச ரூபாயைக் கூட தொடவில்லை. ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் அவ்வாறில்லாமல் உச்சபட்ச விலையில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் களமிறக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹிமாலயன் பைக்கின் விலையை, நிறம் வாரியாக கீழே காணலாம்.

கிராணைட் கருப்பு : ₹1,91,401

பனி வெள்ளை : ₹1,91,401

ஸ்லீட் சாம்பல்: ₹1,94,155

கிராவல் சாம்பல் : ₹1,94,155

ஏரி நீளம் : ₹1,95,990

மலை சிவப்பு : ₹1,95,990

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

மேற்கூறிய நிறத் தேர்வில் மட்டுமே ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும், மேலே பார்த்த விலைப் பட்டியல் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலையைக் காட்டிலும் 100 சதவீத அதிக விலையுடன் பிலிப்பைன்ஸில் இப்பைக் களமிறங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ஏற்றுமதி மற்றும் வரி உள்ளிட்டவற்றின் காரணமாக இத்தகைய அதிகபட்ச விலையை பிலிப்பைன்ஸ் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இந்த பைக்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் ராயல் என்ஃபீல்டு விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

அந்தவகையில், இப்பைக் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில், போலீஸ் பைக்காக இது மாறியிருக்கின்றது. ஆம், காவலர்களின் ரோந்து பணிக்காக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், இந்த நாட்டில் மட்டுமே ராயல் என்ஃபீல்டின் மூன்று பிரபலமான மாடல்கள் முதல் முறையாக அசெம்பிள் மற்றும் தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படுகின்றன.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மூன்று மாடல்கள்தான் அர்ஜென்டினாவிலேயே வைத்து தயாரிக்கப்பட்டு, விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், புதிய பிஎஸ்-6 தரத்தில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் பிஎஸ்6 மாடலே இப்போது அங்கு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த பைக்கில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இருப்பது பிஎஸ்6 தர மாற்றம் மட்டுமே ஆகும். இதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அந்நிறுவனம் செய்யவில்லை. இப்பைக்கில் 411சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

பிலிப்பைன்ஸில் அறிமுகமான இந்தியர்களின் பிரியமான பைக்... அங்கே இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு எப்படி அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றதோ அதேபோன்றே வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு சிறப்பான டிமாண்ட் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan BS 6 launched in Philippines: Do You Know How Much its Cost?. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X