ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் எண்ட்பீல்டு, ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கடந்த வாரத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள டெலிவிரியில் மும்பையை சேர்ந்த சஞ்சய் சிங் என்பவர் முதல் ஆளாக ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கை டெலிவிரி செய்துள்ளார்.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது பிஎஸ்6 பைக்கை சிவப்பு மற்றும் கருப்பு நிற கலவையில் தேர்வு செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த பிஎஸ்6 பைக்கில் முந்தைய மாடலில் இருந்து பல அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

இது வாடிக்கையாளர்களுக்கு தரமான வாகனங்களை தர வேண்டும் என்று ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் முயற்சி செய்துள்ளதை காட்டுகிறது. இந்நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு மற்றொரு உதாரணம், பெயிண்ட் அமைப்பு. கருப்பு, வெள்ளை மற்றும் ஆலங்கட்டி பனியின் வெள்ளை உள்ளிட்டவை சேர்ந்த பெயிண்ட் அமைப்பு இந்த பிஎஸ்6 பைக்கிற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

மேலும் இந்த 2020 ஹிமாலயன் பைக்கில் பிஎஸ்6 அப்டேட்டாக ஐந்து டெல்-டேல் டைட்ஸிற்கு பதிலாக ஏழு டெல்-டேல் லைட்ஸ்களை கொண்ட ரீ-டிசைனில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், நீண்ட விண்ட்ஷீல்டு மற்றும் கிடைமட்டமான லைட் ஸ்விட்ச் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

இவற்றையெல்லாம் விட மிக பெரிய அப்டேட்டாக அணைத்து வைக்கக்கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலான ரைடிங் சவுகரியத்தை பெற, ரியர் வீல் ட்ரைவிங்கின் போது ஏபிஎஸ் அமைப்பை முழுவதும் அணைத்து வைக்க முடியும்.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

கூடுதலாக, வளைந்த மற்றும் நீண்ட பக்கவாட்டு ஸ்டாண்ட்-ஐ இந்த பிஎஸ்6 பைக் பெற்றுள்ளதால், பைக்கை சரியான இடத்தில் பார்க்கிங் செய்வது மிகவும் எளிதாகும். இந்த 2020 மாடலில் தற்போதைய ஹிமாலயன் பைக்கில் உள்ள 411சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.3 பிஎச்பி பவர் (தற்போதைய விற்பனை ஹிமாலயன் பைக்கை விட 0.2 பிஎச்பி குறைவு) மற்றும் 32 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கவல்லது. ட்ரான்ஸ்மிஷனிற்காக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

இந்த புதிய ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.86 லட்சத்தில் இருந்து ரூ.1.89 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 பைக் சந்தையில் ஸ்லீட் க்ரே, பனியின் வெள்ளை, க்ரானைட் ப்ளாக், க்ராவெல் க்ரே, ஏரியின் ப்ளூ மற்றும் ராக் ரெட் என்ற ஆறு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கியது...

ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் டெலிவிரிகள் தொடங்கப்பட்டிருப்பது ஹிமாலயன் பைக் பிரியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான தகவலே. இந்த பிஎஸ்6 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி செய்திருக்கும் மும்பையை சேர்ந்த சஞ்சய் சிங்கிற்கு ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள். சஞ்சய் மட்டுமில்லாமல் இனி இந்த பைக்கை டெலிவிரி செய்யக்கூடிய அனைவருக்கும் இந்த பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் ஆச்சிரியத்தை வரவழைக்கும் என்பது உறுதி.

Image Courtesy: Sanjay Singh

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan BS6 Deliveries Begin: Mumbai Gets First Motorcycle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X