இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

இந்தோனிஷியாவை சேர்ந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக் மாடலை மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பைக் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் மாடல்கள், மோட்டார்சைக்கிள் மறு உருவாக்க நிறுவனங்களின் முதன்மையான தேர்வுகளாக உள்ளன. ஏனெனில் அவை வடிவம் மற்றும் செயல்திறன்களுக்கு இடையே சிறப்பான பேலன்ஸை கஸ்டமைஸ்ட் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

இதனால் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் மாடிஃபைடு செய்யப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்னர் பல முறை பார்த்துள்ளோம். இதில் பெரும்பான்மையான மறு உருவாக்க பணிகள் அனைத்தும் ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் மீது தான் தொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கு 650 ட்வின்ஸ் பைக்குகள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதும் ஒரு காரணமாகும்.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்காகவே வெளியிடப்பட்டதுபோல் விளங்கும் 650 ட்வின்ஸ் மாடல்கள் தயாரிப்பாளர் நினைப்பில் இருந்து வேறுபட்ட தோற்றத்திற்கு செல்ல வாய்ப்புகள் மிகவும் குறைவே. மேலும் இந்த பைக்குகளில் 350சிசி மற்றும் 500சிசி என்ஜின் அமைப்புகளை பொறுத்துவதும் எளிமையான பணியாக உள்ளது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

ஆனால் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்ட ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கை கஸ்டமைஸ்ட் மாற்றங்களுடன் பார்ப்பது அரிதான ஒன்றே. ஏனெனில் ஏற்கனவே அட்வென்ஜெர் டூரர் தோற்றத்தில் இருக்கும் ஹிமாலயன் மாடலில் புதிய மாடிஃபைடு மாற்றங்களை கொண்டுவர உரிமையாளர்கள் பெரிதாக ஆசைப்படுவதில்லை.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

ஆனால் இந்தோனிஷியா நாட்டை சேர்ந்த ஜூலியன் பலாபா என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இணையாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக் மாடலை மாற்றியமைத்துள்ளது. இதற்கு காரணம், பைக்கை இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் ட்ராக்கர் தோற்றத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

பிடி விநியோகிப்பாளர் மோட்டார் இந்தோனிஷியா (டிஎம்ஐ) என்ற அமைப்பு நடத்தும் கஸ்டம் மோட்டார்சைக்கிள் போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கிற்கு ஜூலியன் நிறுவனம் ராட் என பெயர் வைத்துள்ளது. நேரடியாக ட்ராக்டர் மோட்டார்சைக்கிளாக உருவாக்க திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் நியோ-ரெட்ரோ தீம்-ல் உள்ளது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

இவ்வாறான கஸ்டம் பைக்குகளை தயாரிப்பதில் ஜூலியன் நிறுவனத்திற்கு பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், இதன் டிசைன் அமைப்பை உருவாக்கியதில் பல முறை யோசித்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது இதன் தோற்றத்தை பார்த்தாலே தெரிய வருகிறது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

கஸ்டமைஸ்ட் மாற்றங்களில் ஒரு பகுதியாக வழக்கமான ஹிமாலயன் மாடலில் இருந்து இந்த பைக்கின் இருக்கை உயரம் 40மிமீ தாழ்வாகவும், ஒட்டுமொத்த நீளம் 80மிமீ குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான ஹேண்ட்லிங் மற்றும் உகந்த ரைடிங் சவுகரியத்திற்காக புதிய ட்ரிபிள்-ட்ரீ மூலமாக பைக்கை மேம்படுத்தியுள்ளது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

மேட் க்ரே, மஞ்சள் மற்றும் கருப்பு ஷேட்களை உள்ளடக்கிய பெயிண்ட் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு, எரிபொருள் டேங்க் மற்றும் அகற்றி மறுபடியும் எளிதாக பொருத்தக்கூடிய வகையிலான இருக்கைகள் உள்ளிட்டவை இந்த கஸ்டம் பைக்கின் சிறப்பம்சங்களாகும். சஸ்பென்ஷன் அமைப்பு, ஷோவா எஸ்எஃப்எஃப் யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் ஹோலிங்க்ஸ் மோனோஷாக் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...

பைக்கின் பின்புறத்தை பற்றி கூறாமல் இருக்க முடியாது. ஏனெனில் நீட்டிக்கப்பட்ட ஸ்விங் ஆர்ம் க்ராஃப்டு ரியர்-வீல் கவராக மாற்றப்பட்டுள்ளது. ஜூலியன் நிறுவனம் இந்த பைக்கை விற்பனை செய்வதற்காகவோ அல்லது மற்ற பைக்குகளுடன் போட்டியிடுவதற்காகவோ தயாரிக்கவில்லை மாற்றாக பைக் வடிவமைப்பாளர்களின் கலெக்‌ஷனில் இடம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan tracker mod
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X