Just In
- 6 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
50 பிஎச்பி டர்போ எஞ்சினுடன் உருவாக்கப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!
டர்போ சார்ஜர் துணையுடன் 50 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் ஸ்பெஷலான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய மாற்றங்கள், சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

ஆஃப்ரோடு அல்லது ஆன்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்குமான மிகச் சிறந்த தேர்வாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது. சிறப்பான வடிவமைப்புடன், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில், டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் கூடிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் இந்த பைக்கை உருவாக்கி இருக்கிறது. சாதாரண ஹிமாலயன் பைக்கில் பல்வேறு மாற்றங்களை செய்து இந்த புதிய பைக்கை ராயல் என்ஃபீல்டு தொழில்நுட்ப மையத்தின் பொறியியல் துறை வல்லுனர்கள் மாற்றி இருக்கின்றனர்.

மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஹிமாலயன் பைக்கிற்கு MJR Roach என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. சாதாரண பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 411 சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால், கர்ரெட் நிறுவனத்தின் ஜிடி 125 டர்போசார்ஜரை இதன் எஞ்சினுடன் இணைந்து செயல்திறன் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலின் எஞ்சின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரை வெளி்ப்படுத்தும் நிலையில், இந்த எம்ஜேஆர் ரோச் மாடலின் எஞ்சின் 50 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமையுடன் மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது, இரட்டிப்பு பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

செயல்திறனை கூட்டுவதற்காக டர்போசார்ஜர் மட்டுமின்றி, புகைப்போக்கி அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் க்வாட் புரொஜெக்டர் ஹெட்லைட் அமைப்பும் முக்கிய அம்சமாக இருக்கிறது. கான்டினென்டல் டிகேசி 80 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடியோ கேம்களில் வரும் பைக்குகளை மனதில் வைத்து இந்த புதிய மாடலை உருவாக்கி இருப்பதாகவும், இங்கிலாந்து தொழில்நுட்ப மையத்தில் இருந்த சில உதிரிபாகங்களை வைத்து இந்த பைக்கை உருவாக்கும் முயற்சிகள் நடந்ததாகவும் ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.