சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக சந்தைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்க்கப்படும் ஹண்டர் மாடல் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தயாரிப்பு மாடல்களின் எண்ணிக்கையை அடுத்த சில வருடங்களில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான என்ஜின் அமைப்புகளுடன் தயாராகிவரும் இந்த பைக் மாடல்கள் பெண்கள் மற்றும் முதன்முறையாக பைக்கை ஓட்டுபவர்களுக்கும் ஏற்ற விதத்தில் தோற்றத்தை கொண்டு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

இந்த வகையில் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக் மாடலை தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக விரைவில் கொண்டுவரவுள்ளது. இதனை தொடர்ந்து ஷெர்பா மற்றும் ஹண்டர் என்ற பெயர்களிலும் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வெளிவரவுள்ளன.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

இத்தகைய புதிய ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் அறிமுகங்கள் குறித்து வெளிவந்துள்ள தகவலில் இந்நிறுவனம் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக ஜே1டி என்ற பெயரில் பைக் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜே1டி பெயர் தான் ஹண்டர் மாடலை குறிக்கிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

இந்த நிலையில் தான் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது அடையாளம் தெரியாத ராயல் எண்ட்பீல்டு பைக் மாடல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பைக் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

இந்த சோதனை பைக்கில் நாம் கவனிக்க வேண்டிய வகையில் பல அம்சங்கள் இருப்பினும் இது ராயல் எண்ட்பீல்டு ஹண்டர் மாடல் தானா என்ற சந்தேகம் எழுந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இதன் தோற்றம் கிட்டத்தட்ட மீட்டியோர் மாடலையும் ஒத்து காணப்படுகிறது.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

ஆனால் தற்போது இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள பைக்கில் 350சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருப்பது மட்டும் உறுதி. இதன் இருக்கை அமைப்பு இண்டர்செப்டர் 650 மாடலில் இருப்பது போல் உள்ளது. சிங்கிள்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் செமி-டிஜிட்டல் தரத்தில் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

சஸ்பென்ஷன் அமைப்பு வழக்கமானதாகவும், எக்ஸாஸ்ட் ஸ்டப்பியாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் பெரிய அளவிலும் மற்றும் பெட்ரோல் டேங்க் க்ராஷ் பாதுகாப்பான்களுடனும் தோற்றமளிக்கிறது. இந்த படத்தில் பைக்கின் சக்கர பகுதி மங்கலாக காட்சியளிக்கிறது. இருப்பினும் இந்த சோதனை பைக்கில் சக்கரங்கள் 5-ஸ்போக் டிசைனில் இருப்பது போல தான் தெரிகிறது.

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

பின்புறத்தில் எல்இடி டெயில்லேம்ப், ஹாலோஜன் டர்ன் சிக்னல்களுடன் உள்ளது. ஜே1டி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்ற ராயல் எண்ட்பீல்டு ஹண்டர் மாடல் முற்றிலும் பெண்களுக்கான பைக்காக வெளிவரவுள்ளதாக தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

சென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...

ஆனால் தற்போது சோதனையில் ஈடுப்பட்டுள்ள பைக் ஹண்டர் மாடலாக இருந்தால் இதன் மொத்த வடிவத்தை பொறுத்தவரையில் பெண்களுக்கான தயாரிப்பாக இது இருக்கமா என்பது சந்தேகமே.

Most Read Articles
English summary
Royal Enfield Hunter spied again – Side view reveals new details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X