சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று அசத்தலான பாப்பர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு இந்தியாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கும் ராயன் என்பீல்டு பைக்குகள் மிகவும் ஏற்றதாக விளங்குகின்றன.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

இதனால் பல ராயல் என்பீல்டு பைக்குகள் இதற்கு முன்னர் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். இந்த வகையில்தான் தற்போது இந்நிறுவனத்தின் இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று பாப்பர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650 பைக்கை முதன்முதலாக 2018ல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஜிடி650 பைக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் பெரிய அளவிலான தோற்றம் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களுக்கு சரியான தேர்வாக விளங்கி வருகிறது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

இத்தகைய 650சிசி பைக்கை தற்போது ‘கிழக்கு இந்தியா மோட்டார் சைக்கிள் ரிவோல்யூஷன்' என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபை பைக்கிற்கு அந்நிறுவனம் "ரீகல்" என பெயர் வைத்துள்ளது.

இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கில் கஸ்டம் ஹெட்லேம்ப், புதிய சிங்கிள்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹேண்டில்பார் அமைபில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால் லிவர்கள் மற்றும் ஸ்விட்ச்கியரிலும் எந்த மாற்றமும் இல்லை.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

ஆனால் முன்பக்க ஃபெண்டர் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் டேங்கும் ரீடிசைனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டேங்க் மூடியும், கால் முட்டிகளை பாதுகாக்கும் பேட்களும் கஸ்டம் பாகங்களாக உள்ளன. நீளமான ஒற்றை-துண்டு இருக்கை நீக்கப்பட்டுள்ளது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

அதேபோல் அதற்காக இருந்த ஃப்ரேமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு பதிலாக பாப்பர் ஸ்டைலில் இருக்கை இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பேட்டரி பாக்ஸ் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உடன் பின்பக்க சஸ்பென்ஷனின் இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

இவற்றுடன் பின்பக்க நம்பர் ப்ளேட்டிற்கு இரு முனைகளிலும் புதிய டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இண்டிகேட்டர்களும் புதியதாக உள்ளன. பின் சக்கரத்திற்கு அருகில் உள்ள கருவிப்பெட்டி பைக்கிற்கு பழைய பைக்குகளின் தோற்றத்தை வழங்குகிறது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

எக்ஸாஸ்ட் சிஸ்டம் வளையாத இரும்பால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. பைக் முழுவதும் பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் அமைப்பை வழங்கிய கஸ்டமைஸ்ட் நிறுவனம் ராயல் என்பீல்டு முத்திரையில் கை வைக்கவில்லை.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

அதேபோல் எக்ஸாஸ்ட் அமைப்பை தவிர்த்து பைக்கின் என்ஜின் பாகங்களிலும் எந்த மாற்றத்தையும் கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் கூட எந்த மாற்றமும் இல்லை. ராயல் இண்டர்செப்டர் 650 பைக்கில் 648சிசி இணையான-இரட்டை என்ஜின் வழங்கப்படுகிறது.

சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்

அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்யூல் ஷாக்கர்களும் உள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் 320மிமீ மற்றும் 240மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650-Based Bobber Looks Marvellous
Story first published: Saturday, September 26, 2020, 23:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X