Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகளவில் இணையத்தில் பிரபலமாகும் மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இண்டர்செப்டர்650 பைக் இதுதான்!!
உலகளவில் அனைவரையும் கவரும் விதத்தில் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பேசும் பொருளாகியுள்ள இந்த மாடிஃபை பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் கஸ்டமைஸ்ட் செய்யப்படுவதில் ராயல் என்பீல்டு பைக்குகள் அதிமானவை என்பது உங்கள் எல்லாருக்குமே நன்றாக தெரியும். இந்த நிறுவனத்தின் புதிய 650சிசி இரட்டை பைக்குகள் மாடிஃபை பைக் பிரியர்களின் முதன்மை தேர்வுகளுள் உள்ளன.

இந்த வகையில் மிகவும் நேர்த்தியான தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். புல்லட்டர் கஸ்டம் என்ற நிறுவனத்தால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு உரிமையாளர் ஹம்மிங்பேர்டு 650 என பெயர் வைத்துள்ளார்.

புல்லட்டர் கஸ்டம், இவ்வாறான மாடிஃபை பணிகளால் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. பெங்களூரை சேர்ந்த இந்த நிறுவனம் 2007ல் இருந்து இவ்வாறான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் ராயல் என்பீல்டு 650சிசி இரட்டை பைக்குகளை கஸ்டமைஸ்ட் செய்வது புல்லட்டர் கஸ்டம் நிறுவனத்திற்கு இதுதான் முதல்முறையாக இருக்காது.

வழக்கமான இண்டர்செப்டர் 650 பைக்குகளை காட்டிலும் ரைடிங் பொசிஷன் மிகவும் நேர்த்தியாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு கஸ்டமைஸ்ட் நிறுவனத்திற்குதான் சல்யூட் வைக்க வேண்டும். முதன்மை மாற்றமாக ஹேண்டில்பார் ஓட்டுனரை பின்னோக்கி தள்ளு விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பைக்கிற்கு பருத்த தோற்றத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் டயர்களும் நன்கு அகலமானதாக பொருத்தப்பட்டுள்ளன. எந்த அளவிற்கு என்றால், முன்பக்கத்தில் 120மிமீ அகலத்திலும், பின் சக்கரத்தில் 180மிமீ-லும் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி முன்னோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது. பைக்கில் மற்ற மாற்றங்கள் என்று பார்த்தால், கஸ்டம் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் ஓட்டுனர் இருக்கை சற்று தாழ்வாகவும் அகலமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் இடம் பெட்ரோல் டேங்கிற்கு சற்று இடதுபுறமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் சற்று தாழ்வாகவும், சிறியதாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. மாடிஃபை மாற்றங்கள் இதோடு நிற்கவில்லை, எக்ஸாஸ்ட் சிஸ்டத்திலும் தொடர்ந்துள்ளது.

ஹம்மிங்பேர்டு 650 பைக்கில் சந்தைக்கு பிறகான எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மாடிஃபை பைக் என்னென்ன பாகங்கள் இருந்தால் அழகாக தெரியுமோ அவை அத்தனையையும் பெற்றுள்ளது. ஆனால் குறிப்பாக எனக்கு பிடித்தது, பைக்கிற்கு இடதுபுறத்தில் செங்குத்தான வடிவில் வழங்கப்பட்டதுதான்.

ஏனெனில் டெயில்லேம்ப் கூட பைக்கின் பின்பக்கத்தில் இல்லை. அதற்கு பதிலாக எல்இடி ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளில் ஒரே 649சிசி காற்று/ஆயில்-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.