இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

ரூ. 2.5 லட்சத்திற்கு கிடைக்கும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் விலை ரூ. 7 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

சந்தையில் ரூ. 2.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக்கை ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பைக்காக இளைஞர் ஒருவர் மாற்றியிருக்கின்றார். இத்தகைய உச்சபட்ச விலையில் என்னென்ன சிறப்பு வசதிகளை அவர் ராயல் என்பீல்டு பைக்கில் சேர்த்திருக்கின்றார் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் இன்டர்செப்டார் 650 பைக்கும் ஒன்று. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் இரட்டையர் மாடலாகவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதாவது, இன்டர்செப்டார் 650 பைக்குடன் உடன் பிறப்பு சகோதரராக கான்டினென்டல் ஜிடி 650 அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

இந்த இரட்டையர்களில் நல்ல வரவேற்பைப் பெறும் மாடலாக இன்டர்செப்டார் 650 இருக்கின்றது. இந்த சிறப்புமிக்க பைக்கையே அபினவ் பாத் எனும் இளைஞர் விலையுயர்ந்த பைக்காக மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றியிருக்கின்றார். இதனால் ராயல் என்பீல்டு பிரியர்களின் கவனத்தை இப்பைக் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

பைக்கை மாற்றியமைக்க பழைய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் பாகங்கள் சில பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான் இதன் இப்பைக்கின் விலை சற்றே உயர்ந்திருக்கின்றது. மேலும், ஸ்கிராம்ப்ளர் பைக்கின் கூறுகளைப் பெற்றதால், இது ஸ்க்ராம்ப்ளர் ரக இருசக்கர வாகனமாக மாறியிருக்கின்றது.

இந்த பைக்கோட மதிப்பு ரூ. 7 லட்சமாம்... எதோ வெளிநாட்டுல இல்லைங்க, நம்ம இந்தியாவுலதான் இந்த விலை!

யுஎஸ்டி ஃபோர்க், ஸ்பிராக்கட், டிஸ்க் பிரேக் மற்றும் காலிபர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கூறுகள் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த புதிய அணிகலன்களைப் பெற்ற காரணத்தினாலயே இன்டர்செப்டார் புதிய தோற்றம் மற்றும் விலையுயர்ந்த ஒன்றாக மாறியிருக்கின்றது.

மேற்கூறிய கூறுகள் மட்டுமின்றி புதிய மடக்கிக் கொள்ளக்கூடிய கால் வைப்பான்கள், கியர் லிவர், பிரேக் பெடல் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, பல்வேறு கூறுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றினால் இந்த பைக்கின் உருவம் மட்டுமின்றி உயரமும் சற்று லேசாகக் கூடியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Royal Enfield Interceptor 650 Modified With Old Triumph Scrambler Parts. Read In Tamil.
Story first published: Thursday, December 24, 2020, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X