இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

இந்தியாவிற்கு பெருமை தேடி தரும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் இங்கிலாந்து இருசக்கர வாகன சந்தையில் புதிய சாதனைப் படைத்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் சிலவற்றிலும் அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ஆம், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் இங்கிலாந்தில் சிறப்பான விற்பனை பெறும் பைக்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக் உரு-மாறியிருக்கின்றது.

இந்த பைக்கிற்கு ஆண்-பெண் என பாராபட்சமின்றி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். இதே சூழல்தான் உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வருகின்றது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

இதன் விளைவாகவே ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 இங்கிலாந்தின் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற பெறுமையைச் சூடியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை அந்நாட்டு மோட்டார்சைக்கிள் இன்டஸ்ட்ரீ அசோஷியேஷன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

அது வெளியிட்டுள்ள தகவலின்படி, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 கடந்த 2020 ஜூன் மாத விற்பனையில் ஒட்டுமொத்தமாக 196 யூனிட்டுகளை விற்று இந்த இடத்தை பிடித்திருக்கின்றது. இது இரண்டாவது இடமாகும்.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மேலே (முதன்மை இடம்) ஹோண்டா பிசிஎக்ஸ் 125 ஸ்கூட்டர் அமர்ந்திருக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக 445 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை யமஹா நிறுவனத்தின் என்மேக்ஸ் 125 ஸ்கூட்டர் பிடித்திருந்தது. இதைதான் தற்போது ஹோண்டா பிசிஎக்ஸ் 125 பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

இதைத்தொடர்ந்து, அதாவது ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650-க்கு அடுத்தபடியாக பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் நிற்கின்றது. இது 188 யூனிட்டுகளுடன் இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது.

கடந்த காலங்களில் டூ வீலர் விற்பனையில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்த வந்த இங்கிலாந்து இருசக்கர வாகனச் சந்தைப் பிரிவு தற்போது மீண்டெழும்பத் தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

இந்நிலையில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் அமோகமான விற்பனையைப் பெற்று இந்தியாவிற்கு பெறுமைத் தேடி தந்துள்ளது. இந்த பைக்கை டுவின் மாடல்களாக அந்நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ஆனால், இதில் சற்று அதிக விற்பனையைப் பெறும் மாடலாக இன்டர்செப்டார் 650 உருவெடுத்துள்ளது. இதற்கு அந்த பைக்கின் அதி திறன் மற்றும் ஸ்டைலிஷான தோற்றமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இத்துடன், இந்த பைக்கின் குறைந்த விலையும் இங்கிலாந்தின் சிறப்பான விற்பனையைப் பெறும் பைக்காக மாற்ற காரணமாக உள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

அதேசமயம், தற்போதைய விற்பனை எண்ணிக்கை மிக குறைவுதான். ஆனால், கடந்த 70 ஆண்டு கால இங்கிலாந்து வாகன உலகில் இந்திய நிறுவனம் பெறாத ஓர் இடத்தை ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பெற்றிருக்கின்றது. எனவேதான் இந்த செய்தி தற்போது ஒட்டுமொத்த வாகன துறையின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் அம்சங்களுக்கு ஒத்தவாறு வேறு பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகள் இன்டர்செப்டார் 650-யைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையைக் கொண்டதாக இருக்கின்றன. எனவேதான் பைக் பிரியர்களின் தேடலில் சமீப காலமாக இன்டர்செப்டார் 650 முன்னணி இடத்தைப் பெற ஆரம்பித்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

மேலும், பல பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அது டஃப் கொடுத்து வருகின்றது. இந்த பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கி வரும் இந்த பைக் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது இந்தியாவில் ரூ. 2.56 லட்சத்திற்கு கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 UK Sales Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X