350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனையான ராயல் எண்ட்பீல்டு பைக் மாடல்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

கடந்த வருடத்தை போலவே கடந்த மாதத்திலும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளின் விற்பனை சரிவை நோக்கியே சென்றுள்ளது. இந்நிறுவனத்திற்கு தற்போது உள்ள ஒரே ஆறுதல், வெளிநாட்டு சந்தைக்கு கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,228 ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இந்த எண்ணிக்கை 2019 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது சில நூறு யூனிட்கள் அதிகமாகும். அந்த சமயத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து 1,829 யூனிட் பைக்குகள் வெளிநாட்டு சந்தைக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இந்திய சந்தையில் 2020 ஜனவரி மாதத்தில் 61,292 ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே 2019 ஜனவரி மாதத்தில் மொத்தம் 70,872 யூனிட் பைக்குகளை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

மாடல் வாரியாக பார்த்தோமேயானால், ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக் மாடல் கடந்த மாதத்தில் 40,834 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 46,321 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனையான 2019 ஜனவரியை விட 11.85 சதவீதம் குறைவாகும்.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இருப்பினும் 350சிசி பிரிவில் கிளாசிக் 350 மாடலின் விற்பனை ஆதிக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல மற்ற அனைத்து ராயல் எண்ட்பீல்டு மாடல் பைக்குகளை விடவும் மிக பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள புல்லட் 350 மாடல் கடந்த மாதத்தில் 9,559 யூனிட்களை சந்தையில் பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் உள்ள கிளாசிக் 350 மாடலுக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள பைக்கிற்கும் சுமார் 31 ஆயிரம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளன.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

மூன்றாவது இடத்தில் உள்ள எலக்ட்ரா 350 மாடல் 2020 ஜனவரியில் 5,869 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்த மாத விற்பனையில் ஒரு சில ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் மட்டுமே சந்தையில் தனது 2019 ஜனவரி மாதத்தின் விற்பனை எண்ணிக்கையை முந்தியுள்ளன.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இவற்றில் எலக்ட்ரா 350 மாடலும் ஒன்று. இந்த பைக் கடந்த ஆண்டு ஜனவரியில் 2,498 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 134.95 சதவீதம் குறைவாகும்.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இந்த வரிசையில் எலக்ட்ரா 350 மாடலுக்கு அடுத்து 2,415 யூனிட்கள் விற்பனையுடன் தண்டர்பேர்டு 350 பைக் உள்ளது. இந்த பைக் 2019 ஜனவரியில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை இரு மடங்காக பெற்றிருந்தது. ஐந்தாவது இடத்தை ஹிமாலயன் பைக் பிடித்துள்ளது.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

ஹிமாலயனின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 1,438 யூனிட்களாகும். ஆச்சிரயமளிக்கும் விதமாக இந்த ராயல் எண்ட்பீல்டு பைக் மாடல் 2019 ஜனவரியை விட 67 சதவீதம் கடந்த மாதத்தில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. 650 ட்வின்ஸ் பைக்குகள் 1,176 யூனிட்கள் விற்பனையுடன் 6-வது இடத்தில் உள்ளன.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இவற்றின் கடந்த மாத விற்பனையில் கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராயல் எண்ட்பீல்டு 350சிசி மற்றும் 650சிசி பைக்குகளை தவிர்த்து 500சிசி பிரிவில் வெறும் ஒரே ஒரு பைக்கை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Domestic Sales
Rank Models Jan 2020 Jan 2019 Growth (%)
1 Classic 350 40,834 46,321 -11.85
2 Bullet 350 9,559 13,576 -29.59
3 Electra 350 5,869 2,498 134.95
4 Thunderbird 350 2,415 5,422 -55.46
5 Himalayan 1,438 859 67.40
6 650 Twins 1,176 1,069 10.01
7 Thunderbird 500 1 146 -99.32
8 Bullet 500 0 127 -100.00
9 Classic 500 0 854 -100.00
350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

அந்த ஒரு பைக் தண்டர்பேர்டு 500 ஆகும். மற்ற புல்லட் 500 மற்றும் கிளாசிக் 500 மாடல்களில் ஒன்று கூட கடந்த மாதத்தில் விற்பனையாகவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் பெரும்பான்மையான டீலர்ஷிப்களில் தனது 500சிசி பைக்குகளின் விற்பனையை சில மாதங்களுக்கு முன்பு ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் நிறுத்தியது தான்.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

மேலும் இந்த 500சிசி பைக்குகள் பிஎஸ்6 தரத்திற்கும் அப்டேட் செய்யப்பட போவதில்லை. இதனால் இந்த மூன்று 500சிசி பைக்குகளையும் அடுத்த மாத விற்பனை லிஸ்ட்டில் பார்க்க முடியாது என்று தான் தெரிகிறது.

Exports Sales
1 650 Twins 1,144 933 22.62
2 Classic 350 434 76 471.06
3 Himalayan 266 542 -50.92
4 Classic 500 208 233 -10.73
5 Bullet 500 88 23 282.61
6 Thunderbird 350 70 18 288.89
7 Electra 350 18 0 -
8 Bullet 350 0 4 -100.00
9 Thunderbird 500 0 0 -
350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

500சிசி பைக்குகளின் விற்பனை இந்தியாவில் மட்டும் தான் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் இவற்றின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கடந்த மாதத்தில் இந்த 500சிசி பைக்குகள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இதில் அதிகப்பட்சமாக கிளாசிக் 500 மாடல் கடந்த மாதத்தில் 208 யூனிட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் பைக்குகளுக்கு வெளிநாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பது தெரிய வருகிறது.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 எனப்படும் இந்நிறுவனத்தின் 650 ட்வின் பைக்குகள் 2020 ஜனவரியில் சுமார் 1,144 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 933 ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின் மாடல்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 2019 ஜனவரி மாதத்தை விட 22.62 சதவீதம் அதிகமாகும்.

350சிசி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350...!

இவ்வாறான சூழ்நிலையில் இந்நிறுவனம் பெண்களும் ஓட்டும் வகையிலான பைக் மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த புதிய மாடலுக்கு ராயல் எண்ட்பீல்டு ஹண்டர் என பெயரிப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Jan 2020 sales, Classic 350 highest seller
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X