ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

கடந்த பல தசாப்தங்களாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக உள்ளன. எத்துனை போட்டியாளர்கள் வந்தாலும், ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை அசைத்து பார்க்க முடியாத நிலையே தொடர்கிறது.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் தனித்துவத்தை காட்டும் வகையில், கஸ்டமைஸ் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கஸ்டமைஸ் செய்வதற்கு மிக மிக ஏற்ற மாடலாகவும் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் உள்ளன.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

இதற்காக, ஏராளமான கஸ்டமைஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் ஆலையிலேயே மோட்டார்சைக்கிள்களை சிறிய அளவிலான கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான சூப்பரான வசதியை ராயல் என்ஃபீல்டு நேரடியாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

இதற்காக Make It Yours என்ற திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தி உள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளுக்கு தேவையான கூடுதல் ஆக்சஸெரீகள் அல்லது மாறுதல்களை ஆலையிலேயே சுடச்சுட செய்து டெலிவிரி பெற முடியும்.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

அதாவது, மோட்டார்சைக்கிள் உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்த உடன் கஸ்டமைஸ் செய்து பின்னர் டீலருக்கு அனுப்பப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெறும்போதே முழுமையாக கஸ்டமைஸ் செய்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு Make It Yours கஸ்டமைஸ் திட்டத்திற்காக முப்பரிமாண வசதி கொண்ட பிரத்யேக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் அப்ளிகேஷனை பயனப்டுத்தி தங்களுக்கு தேவையான ஆக்சஸெரீகளை பொருத்திக் கொள்வதற்கும், விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கும் இயலும். ஆன்ட்ராய்டு, ஆப்பிள் சாதனங்கள், ராயல் என்ஃபீல்டு இணையதளம் மற்றும் டீலர்கள் மூலமாக இந்த கஸ்டமைஸ் செய்யும் வாய்ப்பை பெற முடியும்.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

முதல்கட்டமாக இன்டர்செப்டர் 650 மற்றஉம் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மாடல்களுக்கு இந்த வசதி கொடுக்கப்படுகிறது. இந்த முறையில் பொருத்தப்படும் ஆக்சஸெரீகள் தரமானதாக இருப்பதுடன், 2 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது. 24 மணிநேரம் முதல் 48 மணிநேரத்தில் இந்த கஸ்டமைஸ் பணிகள் முடித்துக் கொடுக்கப்படும்.

ஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு!

வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளுக்கு தேவையான ஆக்ஸசெரீகளை தேர்வு செய்து ஆர்டர் செய்தால், சென்னையில் உள்ள ஆலையில் கூடுதல் ஆக்ஸசெரீகள் மற்றும் கஸ்டமைஸ் செய்து டீலர்களுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட நகரங்களில் உள்ள டீலர்களில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield motorcycles are among the most modified bikes in the country. Customers often customize their motorcycles with a few cosmetic changes to suit their personality. The company has recognized this trend and launched an in-house personalization platform called (MiY) 'Make-It-Yours' to customize the motorcycle.
Story first published: Tuesday, October 20, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X