பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான மீட்டியோர் 350 பைக்கானது செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டரையும், புதிய ஸ்விட்ச் கியரையும் பெற்றுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக சில படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் புதிய மீட்டியோர் 350 பைக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த இரு மாதங்களை தவிர்த்து கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. இந்த 350சிசி பைக்கானது 2002ல் இருந்து சந்தையில் பிரபலமான ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலாக இருந்த தண்டர்பேர்டு 350க்கு மாற்றாக வெளிவரவுள்ளது.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

இதனால் தண்டர்பேர்டு 350 மாடலின் திருத்தியமைக்கப்பட்ட வெர்சனாக விளங்கினாலும் அதனை விட அப்டேட்டான ப்ரீமியம் அம்சங்களை நிச்சயம் கொண்டிருக்கும். டிசைன் மற்றும் ஹார்ட்வேர்களில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இதன் சமீபத்திய ஸ்பை படங்கள் வெளிப்படுத்தி இருந்தன.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என கூறப்படும் மீட்டியோர் 350 பைக்கில் விண்டேஜ் தோற்றத்திற்காக வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்பை ராயல் எண்ட்பீல்ட் நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த ஹெட்லேம்ப் அமைப்பில் ஹலோஜன் விளக்கு பொருத்தப்படுமா அல்லது பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்படுமா என்பது தெரியவில்லை.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

தண்டர்பேர்டு 350 பைக்கில் ஹலோஜன் யூனிட் வழங்கப்பட்டு வந்தது. மீட்டியோர் 350 பைக்கின் கருப்பு நிற எக்ஸாஸ்ட் சிஸ்டம் க்ரோம் ஷீல்ட்டால் மூடப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் இந்த புதிய 350சிசி பைக் அனலாக் ஸ்பீடோமீட்டர் உடன் சிங்கிள்-பேட் செமி-டிஜிட்டல் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

இதில் மத்தியில் உள்ள டிஜிட்டல் திரையானது எரிபொருள் அளவு, நேரம், ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் உள்ளிட்டவை காட்டும். இவற்றுடன் டெல் டேல் லைட்களும் காட்சியளிக்கின்றன. டிஜிட்டல் ஆம்ப் மீட்டரும் இருக்கலாம். இதன் புதிய ஸ்விட்ச் கியர் ரெட்ரோ தொடுதலில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

இதை தான் தற்போது காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ள படங்களும் வெளிக்காட்டுகின்றன. இதன் இடது புறம் ஹெட்லேம்ப் பீம்-ஐ கண்ட்ரோல் செய்யும்படியும், வலதுபுறம் செல்ஃப் இக்னிஷன் மற்றும் என்ஜின் கில் ஸ்விட்ச் ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

இதன் என்ஜின் அமைப்பு, அதிர்வை குறைப்பதற்காக கவுண்டர்பேலன்ஸர் வசதியை கொண்டிருக்கலாம். மற்றப்படி மொத்த கட்டமைப்பில் புதிய மீட்டியோர் 350 மாடலானது இண்டர்செப்டர் 650 பைக் மாடலை தான் அதிகளவில் ஒத்திருக்கும். குறிப்பாக என்ஜின் அமைப்பு.

பழமை மாறாத அம்சங்களுடன் ராயல் எண்ட்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்...

தற்போதைய 350சிசி என்ஜினுடன் ஒப்பிடும்போது ஜே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டுவரும் இந்த பைக்கின் என்ஜின் சிறப்பான சுத்திகரிப்பிற்காக ட்யூன் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளது. இதன் காரணமாக என்ஜின் வெளிப்படுத்தும் பிஎச்பி மற்றும் டார்க் திறனை சற்று அதிகமாக எதிர்பார்க்கலாம்.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. இவ்வாறு இளைஞர்களை கவரும் விதத்திலான டிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை பெற்று வரும் புதிய ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.85 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Source: Automobili Infiniti/Instagram

Most Read Articles
English summary
Royal Enfield Meteor To Have Semi Digital Instrument Cluster & New Switchgear
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X