ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கில் வழங்கப்பட உள்ள எஞ்சின் மற்றும் இதர சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

இந்தியாவின் நடுத்தர வகை க்ரூஸர் பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மிக முக்கிய தேர்வாக இருந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக தண்டர்பேர்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

தண்டர்பேர்டு பெயருக்கு பதிலாக மீட்டியோர் என்ற புதிய பெயரில் இந்த புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

இந்த மாத இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, மீட்டியோர் பைக்கில் புதிய UCE350 எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

ரைடர் லால் என்ற யூட்யூப் சேனல் மூலமாக இந்த விபரங்கள் கசிந்துள்ளன. இந்த புதிய 350சிசி எஞ்சின் விரைவில் வரும் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக் மாடல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

இந்த புதிய எஞ்சின் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். பழைய மாடலைவிட 1.1 பிஎச்பி கூடுதல் பவரையும், 1 என்எம் கூடுதல் டார்க் திறனையும் இந்த புதிய எஞ்சின் பெற்றிருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

மேலும், நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக சைலென்சர் சப்தம் சிறப்பானதாகவும், செம்மையான ஓட்டுதல் தரத்தை வழங்கும் வகையில் இதன் எஞ்சின் தொழில்நுட்ப மாற்றங்களை பெற்றிருக்கிறது. அதேபோன்று, உட்புறத்தில் உராய்வு குறைவானதாக இருக்கும் பாகங்கள் புதிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் ஹாலஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் வர இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. அனலாக் டயல் மற்றும் நடுவில் சிறிய டிஜிட்டல் திரையும், அதன் அருகில் மற்றொரு டிஜிட்டல் டயல் கொண்டதாகவும் வர இருக்கிறது. இதன் செமி டிஜிட்டல் டயல் மூலமாக டிஜிட்டல் திரை மூலமாக சர்வீஸ் ரிமைன்டர், கடிகாரம், கியர் இண்டிகேட்டர் மற்றும் ஈக்கோ இண்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

அருகில் இருக்கும் மற்றொரு சிறிய டிஜிட்டல் திரை மூலமாக நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். அடுத்து யுஎஸ்பி சார்ஜரும் இந்த பைக்கில் கொடுக்கப்பட இருப்பது முக்கிய விஷயமாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எஞ்சின் விபரம் வெளியானது!

இதுதவிர்த்து, மூன்று விதமான மாடல்களில் இந்த பைக் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் சரியான விலையில் சிறந்த க்ரூஸர் பைக் மாடலாக வாடிக்கையாளர் தேர்வில் முதன்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Royal Enfield Meteor 350 features and specification details have been leaked ahead of its launch in the Indian market.
Story first published: Saturday, September 5, 2020, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X