ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்பு பைக் மாடலான மீட்டியோர் 350-ன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. மீட்டியோர் 350 ஃபையர்பால் என அழைக்கபடும் இந்த பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

ராயல் எண்ட்பீல்டின் இந்த புதிய பைக்கின் லீக் புகைப்படங்கள் இணையத்தில் ஸ்க்ரீன் ஷாட்களாக வெளியாகியுள்ளன. இதில் ஒரு புகைப்படத்தில் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,68,550 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை பைக்குடன் சேர்த்து சில ஆக்ஸஸரீகளுக்கும் உள்ளடக்கியது ஆகும்.

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்கு உடன் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்பை பெற்றுள்ள புதிய மீட்டியோர் 350 பைக்கில் ட்வின்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், படிக்கட்டு வடிவிலான இருக்கை அமைப்பு மற்றும் வட்ட வடிவிலான டெயில்லேம்ப் உள்ளிட்டவையும் உள்ளன.

MOST READ: அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்.. படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை..!

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

இந்நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் பைக்கை போன்று பிரகாசமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தேர்வுகள் இந்த புதிய பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்கின் நிறத்திற்கு ஏற்ற பின்ஸ்ட்ரிப்களை அலாய் சக்கரங்கள் கொண்டுள்ளன.

MOST READ: விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

இந்த பைக்கிற்கு கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்படவுள்ள ஃப்ளைஸ்க்ரீன் ரூ.1,750 விலை கொண்டது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் ஜே-ப்ளாட்ஃபாரத்தால் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் புதிய மீட்டியோர் 350 பைக்கில் தண்டர்பேர்டின் 346சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 350சிசி-ல் மட்டுமில்லாமல் 500சிசி-லும் விற்பனை செய்யப்பட்டு வந்த ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு மாடலின் விற்பனை ஏற்கனவே இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டது.

MOST READ: ஜிம்கள் திறக்கப்படாததால் கேடிஎம் பைக்குடன் உடற்பயிற்சி... விபரீத செயலில் ஈடுப்பட்ட பிரபல பைக் ரேஸர்

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

குறைவான எடையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய மீட்டியோர் 350 பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்கிங்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் தோற்றம் இதுதான்... விலை குறித்த தகவலும் வெளிவந்தது...

தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த புதிய ராயல் எண்ட்பீல்டு பைக் இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் இந்த பைக்கை பற்றிய தகவல்கள் எதுவும் புதியதாக வெளிவரவில்லை. இதனால் இந்த பைக்கின் அறிமுகம் குறித்த தகவல்களை தற்சமயம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் எதிர்பார்க்கலாம்.

Source: Automobili Infiniti/Instagram

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 Fireball leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X