ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனை முதல் மாதமே அமோகம்

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விற்பனை முதல் மாதத்திலேயே சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

நடுத்தர வகைப் பிரிவு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் நம்பர்-1 ஆக இருந்து வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது தனது மோட்டார்சைக்கிள்களை மேம்படுத்தி களமிறக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

அந்த வகையில், தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளை புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி கடந்த மாதம் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

மீட்டியோர் 350 என்ற புதிய பெயரில் வந்த இந்த மோட்டார்சைக்கிள் பழைய மாடலில் இருந்து முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு, எஞ்சின், வசதிகள் ஆகியவை தற்கால வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை கச்சிதமாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

இதனால், இந்த மோட்டார்சைக்கிளுக்கு முதல் மாதத்திலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், கடந்த நவம்பர் மாதம் 7,031 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

இது மிகச் சிறப்பான எண்ணிக்கையாக அமைந்துள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் 350 சிசி மாடல்களில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் முற்றிலும் ஒரு புதி க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

புதிய சேஸீயில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய எஞ்சினுடன் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டெல்லர், சூப்பர்நோவா என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடலுக்கு ரூ.1.75 லட்சமும், ஸ்டெல்லர் மாடலுக்கு ரூ.1.81 லட்சமும், சூப்பர்நோவா மாடலுக்கு ரூ.1.90 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி ஏர்கூல்டு எஸ்ஓஎச்சி வகை எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

முதல் மாதமே அடித்து தூக்கிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350... விற்பனை அமோகம்

டபுள் கிராடில் ஃப்ரேம், வட்ட வடிவிலான ஹாலஜன் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், நீளமான புகைப்போக்கி குழாய் அமைப்பு, புதிய சுவிட்ச் கியர்கள், ஹசார்டு இண்டிகேட்டர் விளக்குகள் வசதி, நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன. 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield recently launched the all-new Meteor 350 cruiser motorcycle in the Indian market. The motorcycle went on sale in the first week of November 2020. Since its launch, the Meteor 350 has registered 7,031 units sold in the previous month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X