நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் இந்திய அறிமுகம் மிக விரைவில் நடைபெறவுள்ளது. ஏனெனில் இந்த பைக்கின் தயாரிப்பு பணி உள்பட ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் மொத்த தொழிற்சாலை பணிகளும் மீண்டும் துவங்கியுள்ளன.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தற்போதும் அமலில் உள்ள போதும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்திய அரசாங்கம் ஊரடங்கில் சிறிய தளர்வை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளை மீண்டும் திறந்துள்ளன.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் எண்ட்பீல்டும் தனது தொழிற்சாலை பணிகளை சுமார் 1 மாதத்திற்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி முதலாவதாக சென்னைக்கு அருகே ஓரகடத்தில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

குறைவான தொழிலாளர்களுடன் ஒரே ஷிப்டாக துவங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை தயாரிப்பு பணியில் அனைத்து பணியாளர்களும் அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளோடு தகுந்த சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு கவசங்களுடனும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

ஓரடங்கத்தை தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் மற்றும் வடகல் பகுதிகளில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளும் விரைவில் தயாரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளன. இவ்வாறு ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தும் வேகமாக துவங்கப்பட்டு வருவதால் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மாடலான மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு பைக் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் மீட்டியோர் 350 பைக்கை கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது பார்த்திருப்போம். இதுவே இந்த பைக்கின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்க காரணமாக அமைகிறது.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் வட்ட வடிவில் ஹலோஜன் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள இந்த 350சிசி பைக்கில் இரண்டாம் நிலை டயல் உடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எளிமையான ராயல் எண்ட்பீல்டு ஸ்டிக்கருடன் கண்ணீர்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், ரெட்ரோ-ஸ்டைலில் டெயில்லைட் மற்றும் டர்ன் சிக்னல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இதுமட்டுமின்றி சோதனை மாடலின் மூலமாக அலாய் சக்கரங்கள் பைக்கின் உடல் நிறத்தில் பின்ஸ்ட்ரிப்களை கொண்டுள்ளதை பார்த்திருந்தோம். இயக்க ஆற்றலை வழங்குவதற்காக முற்றிலும் புதிய என்ஜின் அமைப்பை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் புதிய மீட்டியோர் 350 பைக்கில் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்த என்ஜின் அமைப்பில் தான் தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இதனால் வழக்கமான புஷ்-ரோடு லேஅவுட்டிற்கு பதிலாக சிங்கிள் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்டை இதன் என்ஜின் அமைப்பில் எதிர்பார்க்கலாம். இதுமட்டுமின்றி மீட்டியோர் 350 பைக்கின் என்ஜின் எலக்ட்ரானிக் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும்.

நெருங்கி வரும் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகம்... தீவிரம் காட்டும் ராயல் எண்ட்பீல்டு...

இந்த வகையில் குறைவான அதிர்வுகளையும், அதிகப்படியான மறுச்சுழற்சியையும் வழங்கக்கூடிய என்ஜினை பெற்று வரவுள்ள புதிய ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகத்தை இந்நிறுவனத்தின் தொழிற்சாலை பணிகள் துவங்கப்பட்டிருப்பதால் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor 350 launch soon production restarts details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X