சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

விற்பனை நிறுத்தப்பட்ட தண்டர்பேர்டு பைக் மாடலுக்கு மாற்றாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கொண்டுவரும் புதிய 350சிசி பைக் தான் மீட்டியோர். மிக விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த பைக் மறைப்பு எதுவுமின்றி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த பைக்கின் அறிமுகம் விரைவில் நடைபெறவுள்ளதை சுட்டி காட்டுகிறது. இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களை காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

இதில் சோதனை மீட்டியோர் பைக், தண்டர்பேர்டு பைக்கில் இருந்து கவனிக்கத்தக்க மாற்றாக பகுதி-அனலாக் மற்றும் பகுதி டிஜிட்டல் திரையுடன் உள்ள சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ளது. இதை தவிர்த்து பார்த்தோமேயானால் இந்த புதிய பைக்கில் என்ஜின் அமைப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

இந்த வகையில் மீட்டியோர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 350சிசி என்ஜின் முன்பை விட அதிக ஆற்றலை பைக்கிற்கு வழங்கும். இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேசிஸும் புதியதாக இந்த புதிய பைக் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

இதன் காரணமாக தண்டர்பேர்டின் ஒற்றை-கீழ்நிலைக்கு பதிலாக இரட்டை-கீழ்நிலையை மீட்டியோர் பைக் ஏற்றுள்ளது. இவற்றுடன் சில நுட்பமான மாற்றங்களும் இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது பெட்ரோல் டேங்கிற்கு மத்தியில் எரிபொருள் நிரப்பும் மூடி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

இந்த சோதனை பைக்கின் இரு 10-ஸ்போக் அலாய் சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் விற்பனை மாடலுக்கு ட்ரம் ப்ரேக் தேர்வை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் வழங்காது என்றே தெரிகிறது. பின்பக்க டெயில்லைட் எல்இடி தரத்தில் வழங்கப்பட இருந்தாலும், முன் ஹெட்லேம்ப் வழக்கமான ஹலோஜன் யூனிட்டாகவே இருக்கும்.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

ஹேண்டில்பார் சற்று பெரிதாக்கப்பட்டும், கால் வைக்கும் பகுதி சிறிது முன்பக்கமாக கொண்டுவரப்பட்டிருப்பதும் நிச்சயம் பைக்கின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும். மற்றொரு மாற்றமாக பின்புறத்தில் பில்லனிற்காக க்ராப்ரெயில் பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

மற்றப்படி இருக்கையின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. தண்டர்பேர்டில் உள்ளதை போல் நன்கு பெரியதாகவே வழங்கப்பட்டுள்ளது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் புதிய மீட்டியோர் பைக்கை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.

சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350... இளைஞர்களை கவருமா...?

ஆனால் அதற்குள்ளாக ஊரடங்கினால் இந்த திட்டம் தள்ளிப்போகவே, இந்த பைக் வரும் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பாக அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்டர்பேர்டு 350 பைக்கை காட்டிலும் சற்று கூடுதலான விலையில் வெளிவரவுள்ள புதிய மீட்டியோர் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.7 லட்சத்தில் இருந்து ரூ.1.9 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor Spied Without Camouflage, Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X