ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதிய தகவல்கள் வெளியானது!

க்ரூஸர் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் மோட்டார்சைக்கிள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் க்ரூஸர் ரகத்தில் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மற்றும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய தலைமுறை மாடலாக தண்டர்பேர்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை மாடலானது மீட்டியோர் என்ற புதிய பெயரில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

இந்த புதிய மோட்டார்சைக்கிளின் சோதனை ஓட்டப் படங்கள் மற்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அண்மையில் இந்த மோட்டார்சைக்கிளின் பற்றிய பல தகவல்கள் வெளியானது.

 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

இதைத்தொடர்ந்து, தற்போது இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் காடிவாடி தளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன. புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 349 சிசி எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்லிப்பர் க்ளட்ச் கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும், 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 130 மிமீ டிராவல் கொண்ட 6 ஸ்டெப் அட்ஜெஸ்ட்டபிள் ட்வின் ஸ்பிரிங் ரியர் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

இந்த மோட்டார்சக்கிளில் முன்புறத்தில் 19 அங்குல அலாய் வீல்களும், பின்புறத்தில் 17 அங்குல அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று முன்சக்கரத்தில் 100/90 டயரும், பின்சக்கரத்தில் 140/70 டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பற்றிய புதியத் தகவல்கள் வெளியானது!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் ஹாலஜன் பல்புடன் கூடிய ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. இந்த மாடலில் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் நேவிகேஷன் வசதிக்காக சிறிய டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor Technical Specs Leaked Online Ahead Of Launch in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X