புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

இந்தியாவின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, புதிய தலைமுறை மாடலாக தண்டர்பேர்டு 350 வர இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

ஆனால், தண்டர்பேர்டு 350 பைக்கின் பெயருக்கு பதிலாக மீட்டியோர் என்ற பெயரில் முற்றிலும் புதிய மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. ஸ்டைலிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

கடந்த பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான ஸ்பை படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அடுத்த ஓரு சில வாரங்களில் புதிய மீட்டியோர் 350 பைக் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

வட்ட வடிவிலான ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வட்ட வடிவிலான டெயில் லைட், டியூவல் கிராடில் ஃப்ரேம் அடிச்சட்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருப்பதுடன், பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றிருக்கும். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள்கொடுக்கப்பட்டு இருக்கும். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இந்த பைக் வர இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க், உயர்த்தப்பட்ட அமைப்புடைய ஹேண்டில்பார், பெரிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு, க்ராஷ் கார்டு, வசதியான ஃபுட்பெக்குகள் உள்ளிட்ட தண்டர்பேர்டு 350 பைக்கின் பல அம்சங்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஓட்டுபவர்களுக்கு அதிக வசதியாக இருக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் அறிமுக விபரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் ரூ.1.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூர பிராயணங்களுக்கு சிறந்த பைக் மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

காடிவாடி தளம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor is expected to be launched sometime next month. The new motorcycle was expected to arrive much earlier in the year. Due to the ongoing Covid-19 pandemic, the launch of the Meteor was delayed.
Story first published: Monday, August 24, 2020, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X