புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மீட்டியோர் பைக் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

நடுத்தர ரக பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350 மாடலானது நீண்ட தூர பைக் பிரியர்களுக்கு சரியான விலையில் கிடைக்கும் சிறந்த பைக் மாடலாக இருந்து வந்தது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு பிஎஸ்-6 தரத்திற்கு இணையான புதிய எஞ்சின் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுடன் புதிய தலைமுறை மாடலாக தண்டர்பேர்டு பைக் மாற்றப்பட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

தண்டர்பேர்டு பைக்கின் பெயர் மாற்றப்பட்டு மீட்டியோர் என்ற பெயரில் இந்த புதிய தலைமுறை மாடலை ராயல் என்ஃபீல்டு விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய பைக் மாடல் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

புதிய மீட்டியோர் பைக் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய பெயர்களில் இந்த வேரியண்ட்டுகள் வர இருக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் தக்கவாறு வெளிப்புறத்தில் பல்வேறு அலங்கார விஷயங்கள், விண்ட்ஸ்க்ரீன், சக்கரங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

புதிய மீட்டியோர் பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் புளுடூத் இணைப்பு வசதியுடன் வர இருக்கிறது. நேவிகேஷன் வசதியை பெறுவதற்கு இது உறுதுணையாக இருக்கும். வட்ட வடிவிலான ஹெட்லைட், தாழ்வான இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றுடன் பாரம்பரிய அம்சங்கள் கொண்ட க்ரூஸர் பைக் மாடலாக வர இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கில் 346சிசி UCE எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 19.1 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின் அறிமுக விபரம்!

புதிய ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், பழைய தண்டர்பேர்டு மாடலின் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொண்ட பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு தக்கவைக்கப்பட்டு இருப்பதும் ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. டிஸ்க் பிரேக்குகளுடன் டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles

English summary
Royal Enfield is preparing to launch the first of many new motorcycles. The brand is expected to introduce a slew of motorcycle starting with the Meteor in the Indian market. The upcoming motorcycle will feature a couple of new features, new technology and an all-new engine.
Story first published: Tuesday, September 1, 2020, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X