ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் ஒன்று ஹார்லி டேவிட்சனின் ஸ்போர்ட்ஸ்டர் பைக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

உலகளவில் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டின் தயாரிப்புகள் மாடிஃபைடு மாற்றங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றன. இதனை வெளிக்காட்டும் விதமாக பல கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகளை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

அந்த வகையில் தற்போது இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் பைக்கின் தோற்றத்திற்கு மாறியுள்ளது. இதுகுறித்த வீடியோ, புல்லட் டவர் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, இருக்கையின்றி கேரேஜில் கிளாசிக் 350 பைக் நிற்க வைக்கப்பட்டிருப்பதில் இருந்து துவங்குகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

கஸ்டமைஸ்ட் மாற்றமாக சக்கரம், சஸ்பென்ஷன்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்பட பைக்கின் மொத்த பின்பகுதியும் மாற்றப்பட்டுள்ளது. இவை கழற்றப்பட்டவுடன் எரிபொருள் டேங்க், ஹேண்டில்பார், ஸ்பீடோமீட்டர் மற்றும் பைக்கின் முன் தலை பகுதியும் கழற்றப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

பிறகு கழற்றப்பட்ட பாகங்களுக்கு மாற்றாக ஹார்லி டேவிட்சனின் பைக்குகளில் உள்ளதை போன்ற எரிபொருள் டேங்க், சேடல் இருக்கைக்காக ஃப்ரேம், ரீடிசைனில் பின்புற மட்கார்டு மற்றும் அகலமான டயர்கள் போன்ற கஸ்டம் பாகங்கள் பொருத்தப்படுகின்றன.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

அகலமான டயர்களுடன் அலாய் சக்கரங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன.

இந்த கஸ்டம் பாகங்கள் பொருத்தப்பட்டு சரி பார்க்கப்பட்டு பின்பு அவை அனைத்தும் மீண்டும் கழற்றப்பட்டு கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை பெறுவதற்கு உட்படுத்தப்படுகின்றன.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

இந்த வகையில் என்ஜின், பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள், இருக்கை, அலாய் சக்கரங்கள் உள்பட சந்தைக்கு பிறகான எக்ஸாஸ்ட்டும் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. முன்பு கழற்றப்பட்ட ஹேண்டில்பார் எந்த மாற்றமுமின்றி அப்படியே மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்பீடோமீட்டர் தற்போது முழு டிஜிட்டல் தரத்திலும், ஹெட்லைட் எல்இடி யூனிட்களுடனும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஹெட்லைட் அமைப்பு இரட்டை செயல்பாடு எல்இடி டிஆர்எல்கள் மற்றும் சந்தைக்கு பிறகான டர்ன் இண்டிகேட்டர்களுடன் இந்த மாடிஃபைடு பைக்கில் காட்சியளிக்கிறது.

ஹார்லி டேவிட்சன் பைக் போன்று இருக்கிறதா? ஆனால் அதுதான் இல்லை, இது ராயல் என்பீல்டு கிளாசிக்350

பின்புறத்தில் எல்இடி ஸ்ட்ரிப் உடன் டெயில்லைட் இருக்கைக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் இந்த மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கும் ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரையில் செலவானதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
Royal Enfield Classic 350 Modified Into Harley Davidson Sportster
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X