கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

எந்த இடத்திற்கும் கொண்டு செல்லும் வகையில், கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி புதிய பைக் ஷோரூமை அமைத்து அசத்தி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில், அனைத்து வாகன நிறுவனங்களும் தனது ஷோரூம்களை கட்டமைப்பில் அதீத கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான பாணியையும், தனது பிராண்டுக்கான தனி அடையாளம் மற்றும் கட்டமைப்பு வழிகளையும் பின்பற்றி வருகின்றன.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

இதனால், ஷோரூம்களுக்கான முதலீடு கணிசமாக உள்ளது. மேலும், பெரிய நகரங்களில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்கு அதிக பிரயேத்னங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர வாடிக்கையாளர்களை எட்டுவதிலும் பிரச்னை இருக்கிறது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

இவற்றை மனதில் வைத்து, வாகனத்திலேயே கட்டமைக்கப்படும் நடமாடும் ஷோரூம்கள் மூலமாக தங்களது தயாரிப்புகளை புதிய இடங்களுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவது வாகன நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ஷோரூம் கான்செப்ட்டை கையில் எடுத்துள்ளது.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

அதாவது, கப்பல்களில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படும் கன்டெயினர்களை பயன்படுத்தி தனது புதிய பைக் ஷோரூமை அமைத்துள்ளது. தாய்லாந்து நாட்டில் இந்த புதிய பைக் ஷோரூம் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

கப்பல் கன்டெயினர்களை பைக் ஷோரூமாக மாற்றி அசத்தி இருக்கிறது. தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடியதாக கன்டெயினர்கள ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கட்டமைத்துள்லனற். அத்துடன், தனது பாணியிலான வர்ண பூச்சு மற்றும் கட்டமைப்புடன் இந்த ஷோரூமை உருவாக்கி காட்சிப்படுத்தி உள்ளனர்.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

இந்த ஷோரூமை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எளிதாக கழற்றி எடுத்து சென்று மீண்டும் அமைக்க முடியும் என்பதே இதன் சிறப்பு. ஒரு இடத்தில் அதிக முதலீட்டுடன் திறக்கப்படும் ஷோரூமை விட இந்த ஷோரூமிற்கான முதலீடு குறைவு.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

தவிரவும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் குறைவான முதலீட்டில் ஷோரூமை தற்காலிகமாக அமைத்து, மீண்டும் வேறு இடத்திற்கோ அல்லது நகரத்திற்கோ கொண்டு செல்லும் வாய்ப்பை இது வழங்கும்.

கப்பல் கன்டெயினர்களை பயன்படுத்தி பைக் ஷோரூம்... அசத்திய ராயல் என்ஃபீல்டு!

இதே கான்செப்ட் இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை விரைவாக எட்டுவதற்கான வாய்ப்பை இந்த புதிய கன்டெயினர் பைக் ஷோரூம்கள் வழங்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield has introduced a unique movable bike showroom using shipping containers in Thailand.
Story first published: Saturday, May 23, 2020, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X