ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக தற்போது 1.25 லட்சம் பேர் காத்து கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக்கை இந்திய சந்தையில், கடந்த நவம்பர் 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மீட்டியோர் 350, முற்றிலும் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், புத்தம் புதிய இன்ஜினுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 10 நாட்களுக்கு உள்ளாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பெற்று விட்டது. இந்த முன்பதிவு எண்ணிக்கை சிறப்பாக இருந்தாலும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதற்கு இணையாக இல்லை. ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக தற்போது ஒன்றே கால் லட்சம் பேர் காத்து கொண்டுள்ளனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

ஆம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை தற்போது 1.25 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இதில், மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்காக வந்துள்ள 8,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளும் அடக்கம். நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து பார்த்தால் இது மூன்று மடங்கு அதிகம் ஆகும் (அப்போது 40,000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் நிலுவையில் இருந்தன).

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

குறிப்பிட்ட ஒரு சில மாடல்களுக்கு, ஒரு சில விற்பனையாளர்கள் உதிரி பாகங்களை சப்ளை செய்வதில் சில பிரச்னைகளை ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைகள் காரணமாக தனது புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் தாமதப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் கூட கடந்த ஏப்ரல் மாதத்தை ஒட்டியே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் அதன் அறிமுகம் பலமுறை தாமதமானது. ஒரு வழியாக கடந்த நவம்பர் 6ம் தேதிதான் மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

அதேபோல் அடுத்த தலைமுறை கிளாசிக்கின் அறிமுகம் கூட தாமதமாகியுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில்தான் அடுத்த தலைமுறை கிளாசிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலிலும், டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில், ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து வேகமாக பிரபலமாகி வருகின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

அத்துடன் புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகம் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தால் இதனை மேலும் அதிகரித்து கொள்ள முடியும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் திட்டத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் கைவசம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்!

ஆனால் தற்போது இருக்கும் சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அந்த திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாக இருக்கலாம். இதற்கிடையே நிலுவையில் உள்ள ஆர்டர்களுக்கு, மோட்டார்சைக்கிள்களை வேகமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும் என ராயல் என்பீல்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Pending Orders Cross 1.25 Lakh Mark - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X