வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

புத்தம் புதிய 650சிசி ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் மிக வலுவான வர்த்தகத்தை பெற்றிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை கையில் எடுத்துள்ளது. மேலும், அரைத்த மாவையே அரைக்காமல், புதிய வகை மாடல்களை அறிமுகப்படுத்துவதே சிறந்ததாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளது.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

இதற்காக, பல புதிய மாடல்களை உருவாக்கும் பணியில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியும் பேட்டி ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

இந்த நிலையில், புத்தம் புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்த உள்ளதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பைக் 650சிசி எஞ்சினுடன் வர இருக்கிறது.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகிய மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. விற்பனையிலும் கலக்கி வருகின்றன. எனவே, இந்த பைக்குகளின் அடிப்படையிலான ஸ்க்ராம்பளர் வகை மாடலாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

இந்த பைக் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து மேலும் இரண்டு புதிய பைக் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் பைக் மாடல்களில் 648சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்6 தரத்தில் கிடைக்கிறது. இதே எஞ்சின்தான் ஸ்க்ராம்ப்ளர் மாடலில் சிறிய மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிறது 650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் பைக்!

இதுதவிர்த்து, புதிய தலைமுறை தண்டர்பேர்டு உள்ளிட்ட மாடல்களையும் மிக விரைவில் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையிலான தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பட உதவி: K-Speed

Most Read Articles
English summary
According to reports, Royal Enfield is working on new 650 cc scrambler bike and it is expected to launch later this year.
Story first published: Saturday, May 9, 2020, 14:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X