உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

கடந்த அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த மற்றும் ஏற்றுமதி செய்த பைக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

பாரம்பரியம் மிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் புல்லட் 350, கிளாசிக் 350, ஹிமாலயன், கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலுமே ராயல் என்பீல்டு நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 66,891 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 71,964 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 62,858 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 67,538 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இது 6.93 சதவீத வீழ்ச்சியாகும்.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

அதே சமயம் ஏற்றுமதியை பொறுத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 4,033 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,426 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. இது 8.88 சதவீத வீழ்ச்சியாகும்.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட சரிவிற்கு பின் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதற்கு 2 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

கொரோனா வைரஸ் பிரச்னையால் பொது போக்குவரத்திற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் விரும்புவது மற்றும் பண்டிகை காலம் ஆகியவைதான் அந்த இரண்டு காரணங்கள். ஆனால் இதில் முதல் காரணத்திற்காக இரு சக்கர வாகனங்களை வாங்கியவர்கள், பட்ஜெட் விலை மாடலைதான் தேர்வு செய்திருப்பார்கள்.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

அவர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கும். இவற்றின் விலை முறையே 1.75 லட்ச ரூபாய், 1.81 லட்ச ரூபாய் மற்றும் 1.90 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield Sales Analysis – October 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X