இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

பெங்களூரை சேர்ந்த புல்லட்டர் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை புதிய தோற்றத்திற்கு மாற்றியுள்ளது. அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இதன் புகைப்படங்களின் மூலம் இந்த பைக்கிற்கு ப்ராட் என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த ராயல் எண்ட்பீல்டு எக்ஸ்500 பைக்கில் நியோ-ரெட்ரோ தோற்றத்திற்காக ஏகப்பட்ட பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த பைக் ஓய்வு நிலையிலும் இயக்கத்தில் இருப்பது போலவே தோற்றமளிக்கிறது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

இந்த கஸ்டமைஸ்ட் பைக்கின் முன்புறத்தில் ஹெட்லைட்டை கொண்ட புதிய முகப்பு தட்டு, 120 மிமீ அளவுடைய பெரிய டயர் மற்றும் சந்தையில் விற்பனை செய்யப்படாத ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி அப்-சைட் டவுன் சஸ்பென்ஷன் அமைப்பும் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

எரிபொருள் டேங்க் மூன்று பக்கங்களிலும் இரு ரேசிங் ஸ்ட்ரிப்களை பெற்றுள்ளது. மேலும் வெப்பத்தை உமிழாமல் இருப்பதற்காக கால்களின் முட்டி அருகே இருக்கும் குழாயை சுற்றிலும் ரப்பர் சுற்றப்பட்டுள்ளது. இதனால் கால்களை ஓய்விற்காக இந்த குழாயின் மீது சாய்த்து வைக்க முடியும்.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

பக்கவாட்டு பேனல்களில் புதிய ப்ராட் என்கிற பேட்ஜ்ஜை இந்த கஸ்டமைஸ்ட் ராயல் எண்ட்பீல்டு பைக் பெற்றுள்ளது. இந்த பேட்ஜ் உண்மையான தண்டர்பேர்டு என்கிற பேட்ஜ்ஜை விட நேர்த்தியான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் லெதர் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பைக் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்தில் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

பின்புற சஸ்பென்ஷன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ராயல் எண்ட்பீல்டு தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட தலைக்கீழான எரிவாயு-சார்ஜ்டு அமைப்பு தான் பின் சஸ்பென்ஷனாக அப்படியே உள்ளது. அதேபோல் தண்டர்பேர்டு எக்ஸ்500 மாடல் கொண்டுள்ள வளைந்த எக்ஸாஸ்ட்டை தான் இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனமும் தேர்வு செய்துள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

ஆனால் எக்ஸாஸ்ட்டிற்கு மேலே வழக்கமாக பொருத்தப்படும் க்ரோம்-ஐ தவிர்த்துள்ளனர். பின்புறத்தில் 140மிமீ அளவுள்ள டயர், மிகவும் அகலமான ரியர் ஃபெண்டருடன் உள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் மற்றொரு முக்கிய மாற்றமாக சிங்கிள் போட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

பெங்களூர் கஸ்டமைஸ்ட் நிறுவனம் தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கின் வெளிப்புற பாகங்களை மட்டுமே அப்டேட் செய்துள்ளது. மற்றப்படி என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் விற்பனை பைக்கில் உள்ள 499சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் இந்த பைக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 27.2 பிஎச்பி பவரையும் 41.3 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கவல்லது. ட்ரான்ஸ்மிஷனிற்காக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தண்டர்பேர்டு எக்ஸ்500 மாடலின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.16 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பு மற்றும் விற்பனையை இந்தியாவில் நிறுத்தவுள்ளதாக கடந்த மாதத்தில் அறிவித்திருந்ததால், இந்த 500சிசி பைக் டீலர்ஷிப்களிடம் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்500 பைக்கை பார்த்துள்ளீர்களா..?

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கணிக்கும் வகையிலேயே உள்ளன. ஆனால் ஹெட்லைட்டிற்காக பொருத்தப்பட்டுள்ள விளக்கு என்ன என்பது தான் புலப்படாமல் உள்ளது. மொத்தமாக பைக் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளதால் சினிமாவில் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

Image Courtesy: Bulleteer Customs

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal Enfield Thunderbird X 500 Modified By Bulleteer Customs
Story first published: Saturday, January 25, 2020, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X