புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

பல புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போதைய வழக்கமான மாடல்களை தவிர்த்து புதிய மாடல்களையும் வரிசை கட்டுவதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

மிட்சைஸ் பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு மிக வலுவான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது. அனைத்து ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கும் தனித்தனி வாடிக்கையாளர் வட்டமும், விற்பனை வாய்ப்பும் உள்ளது. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை குறிவைத்து பல நிறுவனங்கள் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

எனவே, தனது எதிர்கால வர்த்தகத்தை வலுவாக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அதன்படி, பல புதிய மாடல்களுடன் தனது சந்தையை விரிவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

இகுறித்து கார் அண்ட் பைக் தளத்திடம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல்கள் உருவாக்கப் பிரிவு தலைவர் சைமன் வார்பர்டன் சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஏற்கனவே உள்ள மாடல்களை தவிர்த்து பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

மேலும், எங்களது டிசைன் பிரிவு தலைவர் மைக் வெல்ஸ் மொத்தம் 14 புதிய பைக் மாடல்களின் திட்டத்தை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதில், பல மாடல்களை சந்தைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் 650 ட்வின்ஸ் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எங்களது சந்தையை விரிவாக்க புதிய மாடல்கள் அவசியமாக உள்ளது.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

தற்போது கொரோனா பிரச்னையால் வர்த்தகம் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சில மாதங்களுக்கு வருவாய் பூஜ்யமாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வரும் பொருளாதார வல்லமையுடன் இருக்கிறோம். எனவே, புதிய மாடல்களை கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிட்டியோர் 350 என்ற க்ரூஸர் பைக் மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு மாற்றாக வர இருக்கிறது. அடுத்ததாக ஹிமாலயன் பைக்கும் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. செர்பா என்ற பெயரில் புதிய ஹிமாலயன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பைக் மாடல்களுடன் சந்தையை கலக்கப்போகும் ராயல் என்ஃபீல்டு

இதுதவிர்த்து, பல புதிய மாடல்களை அடுத்தடுத்து களமிறக்கவும் அந்த நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழக்கமான மாடல்களை தவிர்த்து புதிய ரக மாடல்களையும் களமிறக்கும் வாய்ப்புகள் உள்ளது உறுதியாகி இருக்கிறது.

Most Read Articles
English summary
Due to the COVID-19 pandemic, the auto industry has taken a huge hit. To keep business running, manufacturers are launching some of their new products silently. As soon as the pandemic ends, every manufacturer will have some new product to launch.
Story first published: Wednesday, May 6, 2020, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X