இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 பைக் ஒன்று கேஃப் ரேஸர் மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் என்ற இரு ரக மோட்டார்சைக்கிள்களின் பாகங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் பொதுவாகவே அதிகளவில் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுபவை என்று நம் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அதிகளவில் ராயல் என்பீல்டு மாடிஃபை பைக்குகளை பார்த்துள்ளோம்.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

இவற்றில் பெரும்பான்மையான மாடிஃபை மாற்றங்கள் ஒன்று பெயிண்ட் அமைப்புகளில் மாற்றமாக இருக்கும் அல்லது பைக்கின் தோற்றத்தில் கொண்டுவரப்படும் மாற்றமாக இருக்கும். நாம் இப்போது பார்க்க போவது இரண்டு ரகத்தை பற்றிதான்.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

இந்த படங்களில் உள்ள மாடிஃபை தண்டர்பேர்டு 350 பைக்கை டெல்லியை சேர்ந்த நீவ் மோட்டார்சைக்கிள்ஸ் என்ற நிறுவனம் கஸ்டமைஸ்ட் செய்துள்ளது. இந்த பைக்கிற்கு இந்நிறுவனம் யோதா என பெயர் வைத்துள்ளது. கேஃப் ரேஸர் மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக்குகளின் பாகங்கள் நேர்த்தியாக பொருத்தப்பட்டிருப்பதே இந்த மாடிஃபை பைக்கின் சிறப்பம்சமாகும்.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

பைக்கின் முன்பக்கத்தில் தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் நீளம் குறைக்கப்பட்ட ஃபெண்டர்களை பார்க்க முடிகிறது. அதேபோல் இரட்டை வட்ட வடிவில் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒற்றை-துண்டு ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றையும் இந்த பைக் கொண்டுள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

பெட்ரோல் டேங்கின் அகலம் பெரியதாக்கப்பட்டுள்ளது. பைக்கின் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பாதுகாக்க அதன் முன்புறத்தில் காற்றை மட்டும் அனுமதிக்கும் மெஷ் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் சற்று மேலே பார்த்தவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸாஸ்ட் அமைப்பில் இறுதி முனையில் எம்4 குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

சாவி நுழைக்கும் பகுதி மைய பேனலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இவை எல்லாத்தையும் விட கவர்ச்சிக்கர அம்சமாக 'YODDHA' முத்திரை கொண்ட கேடயம் வடிவிலான பேனல் என்ஜினிற்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் டேங்கிலும் சிறிய லோகோ ஒன்று உள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

ஒற்றை இருக்கை அமைப்பிற்கு பைக் மாற்றப்பட்டுள்ளதால்ல் பைக்கின் இறுதி முனை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. பின் சக்கரத்தை நெருக்கமாக பிடித்துள்ள ஃபெண்டரைம் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக்கையும் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் இந்த பைக் பெற்றுள்ளது.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

பின்பக்க ஸ்ப்ராக்கெட் புதியதாகவும், முன் டிஸ்க் ப்ரேக் ஸ்டாக் தண்டர்பேர்டு 350-ல் வழங்கப்பட்டதை காட்டிலும் பெரியதாகவும் இந்த மாடிஃபை பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் புதிய அலாய் சக்கரங்களையும், தடிமனான டயர்களையும் இந்த பைக் ஏற்றுள்ளது.

இவ்வளவு ஏன், நம்பர் தட்டுகளை கூட கஸ்டமைஸ்ட் நிறுவனத்தில் இருந்துதான் இந்த பைக் பெற்றுள்ளது. அதுவும் பின்பக்க நம்பர் ப்ளேட் பைக்கின் பக்கவாட்டில் வழங்கப்பட்டிருப்பது உண்மையில் அட்டகாசமாக உள்ளது. ஸ்விட்ச் கியரில் கை வைக்கப்படவில்லை என்றாலும், கண்ணாடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுதான் ராயல் என்பீல்டு யோதா... மாடிஃபை செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 பைக்...

க்ரே நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மாடிஃபை தண்டர்பேர்டு 350 பைக் கருப்பு நிறத்திலும் பாகங்களை கொண்டுள்ளது. என்ஜின் அமைப்பில் மாற்றமில்லை. தண்டர்பேர்டு 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் தொடர்ந்துள்ளது. மொத்தமாக பைக் அட்டகாசமான தோற்றத்தில் உள்ளது. பட இயக்குனர்கள் பார்த்தால் படத்தில் கூட பயன்படுத்தலாம்.

Most Read Articles

English summary
This Modified Royal Enfield ‘Yoddha’ Looks Absolutely Stunning
Story first published: Sunday, October 11, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X