எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியது ஆர்ஆர் குளோபல்!

மின்சார இருசக்கர வாகன தயாரிப்பில் இறங்கி உள்ளதாக ஆர்ஆர் குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தாெடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

மின்சார ஒயர்கள் தயாரிப்பில் ஆர்ஆர் குளோபல் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், மின் சாதன தயாரிப்பில் உள்ள அனுபவத்தை வைத்து அடுத்து மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பிலும் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

பிகாஸ் என்ற பிராண்டில் தனது மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.125 கோடியை முதலீடு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், நவீன யுக வாழ்க்கை முறைகளை மனதில் வைத்து சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் பிகாஸ் மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாகவும் ஆர்ஆர் குளோபல் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

இதுகுறித்து ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஹேமந்த் கப்ரா கூறுகையில்,"மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் இறங்குவதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்கால போக்குவரத்தை எங்களது பிரிமீயம் ரக மின்சார இருசக்கர வாகனங்கள் மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்லும்.

இந்தியாவில் எங்களது மின்சார ஒயர்கள் மற்றும் கேபிள்கள் வர்த்தகத்தை மிகவும் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறோம். எனவே, இந்திய சந்தையின் வர்த்தகத்தை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளோம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

உலக அளவில் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. இந்தியாவும் நவீன தொழில்நுட்பங்களுக்கு தக்கவாறு மாறுவதில் முன்னணி வகிக்கிறது. இங்கு அதிக சந்தை வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த மின்சார இருசக்கர வாகனங்களை பிகாஸ் வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

பிகாஸ் பிராண்டில் முதல்கட்டமாக இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களை 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஆர்ஆர் குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புனே அருகே சகனில் அமைக்கப்பட்டு உள்ள பிகாஸ் வாகன உற்பத்தி ஆலையில் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியும் துவங்கிவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் 80,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்யவும் இலக்கு வைத்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கும் ஆர்ஆர் குளோபல்!

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஆர்ஆர் குளோபல் எலெக்ட்ரிக் நிறுவனம் 1986ல் துவங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தற்போது 10 நிறுவனங்கள் மூலமாக 28 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மின்சார ஒயர்கள், கேபிள்கள்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.

Most Read Articles

English summary
RR Global, a prominent conglomerate in the electrical industry, has announced its entry into the two-wheeler electric vehicle (EV) segment in India. The company also confirmed that it will launch its two-wheeler EV products under the brand name BGauss.
Story first published: Thursday, June 18, 2020, 10:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more