பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தற்போதைய மாடல்களால் அனைத்து விதங்களிலும் மேம்பட்டுள்ளது. இதில் சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றியமையாதது. ஏனெனில் முன்னணி நிறுவனத்தின் வாகனங்கள் கூட பொய்யான வதந்திகளால் மிக பெரிய அளவில் விற்பனையில் சரிவை கண்டுள்ள நிகழ்வுகளும் கடந்த சில வருடங்களில் நடந்துள்ளது.

இதுபோன்ற வதந்திகள் இப்போது மட்டுமில்லை, 90ஆம் காலக்கட்டங்களில் இருந்தே வருகிறது. யமஹா ஆர்டி350 பைக்கை உபயோகப்படுத்தினால் கட்டாயம் விபத்தில் சிக்குவீர்கள் என்பது அந்த காலக்கட்டத்தில் வந்த வதந்திகளுள் ஒன்று. நீங்கள் 90 கிட்ஸ் என்றால் இந்த பொய்யான செய்தியை நிச்சயம் கேட்டீருப்பீர்கள். இவ்வாறான வதந்திகளால் இந்தியாவில் இருந்து விடைபெற்ற சென்ற யமஹா ஆர்டி350 உள்பட சில மோட்டார்சைக்கிள்களை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

யமஹா ஆர்டி350

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆர்டி350 பைக்கை முதன்முதலாக கடந்த 1983ல் சந்தைக்கு கொண்டுவந்தது. ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350, யெஸ்டி 250 மற்றும் ராஜ்தூத் 175 உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிட்ட யமஹாவின் இந்த 350சிசி பைக் மிக விரைவாக சந்தையில் பிரபலமானது.

இந்த பைக்கை யமஹா நிறுவனம் 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இதன் ஜப்பான் மாடலின் டீ-ட்யூன் வெர்சனாக இந்தியாவில் சந்தைப்படுத்தியது. இதன் இரு வெர்சன்களில் ஒன்றான ஹை டார்க், அதிகப்பட்சமாக 31 பிஎச்பி பவரிலும், மற்றொரு வெர்சனான லோ டார்க் 27 பிஎச்பி பவரிலும் இயங்கி வந்தன.

6வது கியரில் 160 km/h வேகத்தை அடைய கூடிய இந்த பைக் 0-விலிருந்து 100 km/h என்ற வேகத்தை வெறும் 7-8 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. இவ்வாறான அதிக செயல்திறனை கொண்டிருந்ததாலும், இதன் இந்திய வெர்சனில் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படாததாலும், இந்த பைக்கை உபயோகப்படுத்திய ரைடர்கள் மிக எளிதாக விபத்துகளில் சிக்குவது தொடர் கதையானது.

இதனால் தான் இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஆனால் இந்த பைக்கின் மோசாமான எரிபொருள் திறன், அதிக செயல்திறன் கொண்ட என்ஜின் மற்றும் இதன் விலையினாலேயே யமஹா ஆர்டி350 பைக் இந்தியாவில் சந்தைப்படுத்துவது நிறுத்தப்பட்டது. சந்தையில் சிறிது சிறிதாக வரவேற்பை இழந்த இந்த பைக்கின் விற்பனை ஒரு கட்டத்தில் மிக பெரிய சரிவை கண்டதும் இதன் விற்பனை நிறுத்தத்திற்கு ஒரு காரணமாகும்.

பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

டிவிஎஸ் சுசுகி ஷோகன்

டிவிஎஸ்-சுசுகி கூட்டணி நிறுவனத்தில் இருந்து ஆர்எக்ஸ்100, ஏஎக்ஸ்100 மற்றும் சுப்ரா உள்பட ஏகப்பட்ட தனித்துவமான பைக்குகள் சந்தையில் 90ஆம் காலக்கட்டத்தில் களமிறங்கின. இவற்றில் ஒன்றாக 'தி பாஸ்' என்ற அடைமொழியுடன் ஷோகன் பைக் அறிமுகமானது.

இந்த பைக்கில் வழங்கப்பட்ட 108.2சிசி, 2-ஸ்ட்ரோக் என்ஜின் 8,500 ஆர்பிஎம்-ல் 14 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. 105 கிலோ என மிகவும் குறைவான எடை கொண்டிருந்தால் அதிகப்பட்சமாக 120 km/h என்ற வேகத்தையும் எடை குறைவான ரைடர்களினால் இதனை விட கூடுதல் வேகத்திலும் இந்த பைக் இயங்கக்கூடியது.

நேர்த்தியான செயல்திறனை இந்த பைக் கொண்டிருந்தாலும், ஹேண்டிலிங் கண்ட்ரோல் மிகவும் கடினமாக இருந்ததினால் மிக விரைவாக இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பிரிந்தது. மேலும் ஆர்எக்ஸ்100 பைக் சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்ற காரணத்திலும் இந்த பைக்கின் விற்பனை கடந்த 2013ல் நிறுத்தப்பட்டது.

பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

பஜாஜ் பல்சர் முதல் தலைமுறை

ஹீரோ ஹோண்டா கூட்டணி நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் துறையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்த மாடல் தான் பல்சர். சிபிஇசட் பைக்கின் 1999 அறிமுகத்திற்கு பிறகு, பஜாஜ் பல்சர் 150 மற்றும் 180 என்ற இரு ட்ரிம்களில் சந்தைக்கு வந்தது. பெரிய அளவிலான 18-இன்ச் பெட்ரோல் டேங்கை கொண்டிந்த இந்த பைக் வட்ட வடிவிலான ஹெட்லேம்பினால் மற்ற பைக்குகளில் இருந்து தனித்து காணப்பட்டது.

அறிமுகத்தில் இருந்து 18 மாதங்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதற்கு பிறகு முதல் தலைமுறை பல்சர் பைக்கின் தரத்தை சரிப்பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பஜாஜ் நிறுவனம் குறைக்க தொடங்கியது. பின்னர் பல்சர் மாடலில் டிடிஎஸ்-ஐ வெர்சன், பெட்ரோல் டேங்கின் கொள்ளவு குறைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

பொய்யான வதந்திகளால் இந்தியாவில் இருந்து மறைந்துபோன மோட்டார்சைக்கிள்கள்...

ஹீரோ ஹோண்டா கரீஷ்மா

ஹீரோ ஹோண்டா கூட்டணி நிறுவனத்தில் இருந்து மிகவும் ஆற்றல்மிக்க பைக் மாடலாக கரீஷ்மா பைக் வெளிவந்தது. அதிக கொள்ளளவு கொண்ட என்ஜின், டிஜிட்டல் ஃப்யூல் மீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ட்ரீப் மீட்டர் உள்ளிட்டவற்றை கொண்டிருந்ததால் அறிமுக நேரத்தில் பிரேத்யகமான மோட்டார்சைக்கிளாக விளங்கியது.

சிறப்பான செயல்திறனை இந்த பைக் கொண்டிருந்தாலும், கரீஷ்மா பைக்கை கண்ட்ரோல் செய்வது கடினமானது என பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் நினைக்க துவங்கினர். இதனால் இதன் விற்பனை பாதித்தது. பின்னர் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் தனித்தனியாக பிரிந்து செயல்பட துவங்கிய போதும் கரீஷ்மா பெயரில் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அது முதல் தலைமுறை கரீஷ்மா மாடலை போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Source: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
‘Banned’ Bikes of India, and their REAL story!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X