முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

கடந்த செப்டம்பர் மாதம் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன? என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்பு இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் கடந்த ஒரு சில மாதங்களாக, இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது? என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

இதில், முதல் 10 இடங்களை பிடித்துள்ள மாநிலங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 1,43,990 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,20,117 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 23,873 இரு சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 19.87 சதவீத வளர்ச்சியாகும். 2வது இடம் உத்தர பிரதேச மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு 1,28,162 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 1,91,233 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. 63,071 டூவீலர்கள் குறைவாக விற்பனையாகியுள்ள நிலையில், 32.98 சதவீத வீழ்ச்சியை உத்தர பிரதேசம் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை மஹாராஷ்டிரா பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,10,373 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,11,683 ஆக இருந்தது. அதாவது 1,310 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 1.17 சதவீத வீழ்ச்சியாகும். 4வது இடத்தை மேற்கு வங்கம் பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பரில் 1,03,648 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

ஆனால் கடந்தாண்டு செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 92,414 ஆக மட்டுமே இருந்தது. அதாவது 11,234 இரு சக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 12.16 சதவீத வளர்ச்சியாகும். 5வது இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பரில் 78,736 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 85,711 ஆக இருந்தது. 6,975 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 8.14 சதவீத வீழ்ச்சியாகும். ஆறாவது இடத்தை பீஹார் பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 70,798 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 75,655 ஆக இருந்தது. 4,857 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 6.42 சதவீத வீழ்ச்சியாகும். ஏழாவது இடத்தை கேரளா பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 51,979 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 56,171 ஆக இருந்தது.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

4,192 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 7.46 சதவீத வீழ்ச்சியை கேரளா பதிவு செய்துள்ளது. 8வது இடத்தை ராஜஸ்தான் பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பரில், 45,296 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 63,598 ஆக இருந்தது.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

அதாவது 18,302 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 28.78 சதவீத வீழ்ச்சியாகும். 9வது இடத்தை ஒடிசா பெற்றுள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 39,193 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 49,502 ஆக இருந்தது. 10,309 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. 20.83 சதவீத வீழ்ச்சியாகும்.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

10வது இடத்தை குஜராத் பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 36,403 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 68,572 ஆக இருந்தது. அதாவது 32,169 இரு சக்கர வாகனங்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 46.91 சதவீத வீழ்ச்சியை குஜராத் பதிவு செய்துள்ளது.

முதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு

நடப்பாண்டு செப்டம்பரில் அதிக இரு சக்கர வாகனங்கள் விற்பனையான டாப்-10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Statewise Two Wheeler Sales September 2020 - Tamil Nadu Tops The List. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X