Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாலகூட இப்படி நடந்திருக்குமா தெரியல..? திருடர்களை பிடிக்க ஹீரோயிஸம் காட்டிய சென்னை போலீஸ்... மிரட்டல் வீடியோ!
செல்போன் கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்த சென்னை போலீசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரலாகி வரும் வீடியோ மற்றும் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் வாகனங்களைச் சார்ந்தே அரங்கேறுகின்றன. ஒன்று, வாகனங்கள் திருடப்படுகின்றன. இல்லையென்றால் திருடப்பட்ட வாகனங்கள் மூலம் வழிப்பறி, கொள்ளைப் போன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்தவகையில், சென்னையையே உறைய வைக்கின்ற வகையில் இருசக்கர வாகனம் சார்ந்து அரங்கேறிய செல்போன் திருட்டு சம்பவத்தை பற்றிதான் இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சென்னை மாதவரம் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளர் அண்டில்ன் ரமேஷ். இவரே தனியொரு நபராக செல்போன் கொள்ளையர்களை துணிச்சலாக இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்தவர். இவரின் இந்த செயலால் பல்வேறு இடங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர வாகனத்தையும் அவர்கள் திருடியே பயன்படுத்தி வந்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று வாகனங்கள் திருடப்படுவதும் கடந்த சில காலங்களாக வாடிக்கையாக வருகின்றது. இதனை எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் கடைசியாக காணலாம்.

துணை ஆய்வாளர் ரமேஷ் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோதே, இரு கொள்ளையர்கள் பாதசாரி ஒருவரிடத்தில் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த துணை ஆய்வாளர், கொள்ளையர்களுக்கே தெரியாமல் விரட்டிச் சென்றார்.

இந்த நிலையிலேயே ஒரு இடத்தில் கொள்ளையர்கள் எப்படி செல்வது என நின்றுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்களின் இருசக்கர வாகனத்தை எஸ்ஐ ரமேஷ் மடக்கினார். இருப்பினும், அங்கிருந்து இரு கொள்ளையர்களும் தப்பிக்க முயன்றனர். ஒருவர் பைக்கை விட்டு இறங்கிவிட, மற்றொரு பைக்குடன் தப்ப முயன்றார். இருப்பினும், எஸ்ஐ ரமேஷ், விடாமல் திருடனை இருக பற்றிக் கொண்டார்.

இதனால், சிறிது தூரம் சென்ற அக்கொள்ளையன் நிலை தடுமாறி கீழே விழ நேர்ந்தது. இதில், எஸ்ஐ ரமேஷும் கொள்ளையனுடன் சேர்ந்தே கீழே கீழே விழுந்தார். அப்போதும், திருடனை அவர் பிடித்துக் கொண்டிருந்ததால், மேற்கொண்டு அவரால் தப்பிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் இருவருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து பிடிப்பட்ட கொள்ளையனிடம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் ஒட்டுமொத்தமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடத்தில் இருந்து 11 செல்போன்கள் மற்றும் ஒரு பஜாஜ் பல்சைர் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இவையனைத்தும் துணை ஆய்வாளர் அண்டில்ன் ரமேஷின் துணிச்சலான செயலினாலயே மீட்கப்பட்டிருக்கின்றன. இவரின் இந்த செயலுக்கு சென்னை காவல் ஆணையர் மஹேஷ் அகர்வால், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இது திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல. துணை ஆய்வாளர் அண்டில்ன் ரமேஷ், தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்த காட்சியே இது. இவரின் முயற்சியால் 11 செல்போன்கள் மற்றும் வழிப்பறிப்பில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பட்டப் பகலில் அரங்கேறிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், துணை ஆய்வாளர் ரமேஷின் துணிச்சலான செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று, திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் கொள்ளையர்கள் சமூக விரோத செயலில் ஈடுபடும்போது, அதன் உரிமையாளருக்கும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகின்றது. வாகன திருட்டுகுறித்து புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டிருந்தால் விரைவில் இதில் இருந்து விடுவிக்கப்படலாம். இல்லையெனில் சற்றே சிரமத்தைச் சந்திக்க நேரிடும்.

இதுமாதிரியான கசப்பான அனுபவங்களைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால், முதலில் வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமானது ஆகும். அதாவது, வாகனஹ்களை திருடர்களிடத்தில் இருந்து வைத்திருக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப கருவிகள் சந்தையில் மிக தாராளமாக கிடைக்கின்றன. ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் ஆகிய கருவிகளைப் பற்றிதான் நாங்கள் கூறுகின்றோம்.

இதனை வாகனத்தில் பொருத்துவதன் மூலம் திருடர்களிடத்தில் இருந்து வாகனங்களை நம்மால் பாதுகாக்க முடியும். குறிப்பாக, வாகனம் திருடப்பட்டாலும், அது குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கின்றது. எந்த பகுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது உள்ளிட்ட அனைத்து தகவலையும் விரல் நுணியில் பெற முடியும். எனவேதான், வாகனத்துறை வல்லுநர்கள் இதுபோன்ற பாதுகாப்பு கருவிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.