சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சூப்பர் சோகோ, அதன் புதிய மேக்ஸி-ஸ்கூட்டரை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

சிபிஎக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துள்ள சூப்பர் சோகோ எலக்ட்ரிக் பிராண்ட், சீனா, ஷாங்காய் நகரத்தை சேர்ந்த ஜியான்ங்சு சூப்பர் சோகோ இண்டெலிஜண்ட் கோ என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

125சிசி பெட்ரோல்-சிவிடி ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக வெளிவந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் ஒற்றை-பேட்டரி வேரியண்ட்டின் விலை 3,599 பவுண்ட் (ரூ.3.53 லட்சம்) ஆகவும், இரட்டை-பேட்டரி வேரியண்ட்டின் விலை 4,699 பவுண்டாகவும் (ரூ.4.61 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் வகையிலான எலக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்துவரும் சூப்பர் சோகோ பிராண்ட்டின் லைன்-அப்பில் புதிய பிசிஎக்ஸ் ஸ்கூட்டர் ப்ரீமியம் தரத்திலான ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. இங்கிலாந்தில் சூப்பர் சோகோ மிகவும் வெற்றிக்கரமான எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

இந்நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான அறிமுகங்களில் இந்த சிபிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சேர்த்து, சியூஎக்ஸ், சியூஎக்ஸ் டுகாட்டி எடிசன், டிஎஸ்எக்ஸ், டிசி மற்றும் டிசி மேக்ஸ் என மொத்தம் 6 தயாரிப்புகள் உள்ளன. சூப்பர் சோகோ, டுகாட்டியின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

கருப்பு, க்ரே மற்றும் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் ஐரோப்பாவில் விற்பனையை துவங்கியுள்ள புதிய சிபிஎக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைன் தத்துவம் நேர்த்தியாகவும் கருப்பு நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளது. முழு எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்களை கொண்ட இந்த ஸ்கூட்டரில் எதிர் காற்றை தடுக்க பெரிய அளவில் கண்ணாடி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக்கும், 8-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. இதன் குழாய்-இல்லாத ரேடியல் டயர்கள் முன்புறத்தில் 100/80R16 என்ற அளவிலும், பின்புறத்தில் 110/80R14 என்ற அளவிலும் பொருத்தப்பட்டுள்ளன.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

ஒற்றை-பக்க ஸ்விங்கார்ம் மற்றும் மையத்தில் பொருத்தப்பட்ட மோட்டார்-ஆல் 91 சதவீதம் வரையிலான எரிபொருள் திறனை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 2022மிமீ, அகலம் 790மிமீ, உயரம் 1442மிமீ ஆகும். தரையில் இருந்து ஓட்டுனரின் இருக்கை 760மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

சூப்பர் சோகோவின் பிமோஸ் வி3.3 மைய கட்டுப்பாட்டு அமைப்பின் மூலமாக கூடுதல் செயல்பாட்டிற்கான பில்லன் க்ராப் கைப்பிடி (கார்பன் இரும்பால் தயாரிக்கப்பட்டது), ரிவர்ஸ் மோட், ஸ்மார்ட்போன் இணைப்பு (சூப்பர் சோகோ செயலி மூலம்), இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக் உள்ளிட்டவற்றை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

முதன்முதலாக 2019 ஐக்மா கண்காட்சியில் அறிமுகமான சிபிஎக்ஸ் ஸ்கூட்டரில் 5.36 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருக்கான 2.7 கிலோவாட்ஸ்/நேரம் பேட்டரி இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இதன் இரட்டை பேட்டரி வேரியண்ட் 2X 2.7 = 5.4 kWh பேட்டரியுடன் இயங்கும்.

சிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்

45 kmph என்ற சராசரியான வேகத்தில் இந்த வேரியண்ட்டை முழு சார்ஜில் கிட்டத்தட்ட 140கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும். அதேநேரம் அதிகப்பட்சமாக 90 kmph என்ற வேகம் வரையில் இயங்கக்கூடிய இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை 90% சதவீதம் சார்ஜ் செய்ய 3 - 4 மணிநேரங்கள் தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Super Soco CPx electric scooter debuts with 140km Range
Story first published: Wednesday, August 26, 2020, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X