இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி மோட்டார்சைக்கிளின் பிரபலமன 125சிசி ஸ்கூட்டர் மாடலாக உள்ள ஆக்ஸஸ் 125-ன் விலை பிஎஸ்6 அறிமுகத்தில் இருந்து மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

பிஎஸ்4 தரத்தில் சிறப்பாக விற்பனையாகி வந்த ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை சுசுகி நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்திருந்தது. அப்போது அறிமுகத்தின்போதே அதன் விலையில் சுமார் ரூ.6,477 அளவில் அதிகரிப்பு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் அதாவது மார்ச் மாத துவக்கத்தில் இதன் விலை ரூ.2,300 வரையில் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,700 அதிகரிக்கப்பட்டுளது.

Variant Old Price New Price Increase
Drum CBS ₹67,100 ₹68,800 ₹1,700
Drum Alloy CBS ₹96,100 ₹70,800 ₹1,700
Disc CBS ₹70,000 ₹71,700 ₹1,700
Drum Special Edition ₹70,800 ₹72,500 ₹1,700
Disc Special Edition ₹71,700 ₹73,400 ₹1,700

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

இது இந்த ஸ்கூட்டரின் பிஎஸ்6 வெர்சன் அறிமுகமானதில் இருந்து மூன்றாவது முறையாக இதன் விலையில் கொண்டு வரப்பட்டுள்ள உயர்வாகும். மொத்தமாக முந்தைய பிஎஸ்4 வெர்சன் உடன் ஒப்பிடும்போது இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை ரூ.10,000-க்கும் அதிகமாகும்.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

இந்த விலை அதிகரிப்பினால் பிஎஸ்6 ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.68,800-ஆக (ட்ரம் சிபிஎஸ்) அதிகரித்துள்ளது. அதேபோல் இதன் டாப் வேரியண்ட்டான டிஸ்க் ஸ்பெஷல் எடிசன் இனி ரூ.73,400 விலையில் விற்பனை செய்யப்படும்.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

பிஎஸ்6 தரத்தில் இந்த ஸ்கூட்டர் மாடலில் பொருத்தப்படுகின்ற 124சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 6750 ஆர்பிஎம்-ல் 8.7 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

சஸ்பென்ஷன் அமைப்பாக ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்படுகிறது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன்சக்கரத்தில் ட்ரம் அல்லது டிஸ்க் ப்ரேக் தேர்வும், பின் சக்கரத்தில் ட்ரம் யூனிட்டும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் கோம்பி ப்ரேக் சிஸ்டமும் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையாக பொருத்தப்படுகிறது.

இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்... சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6-ன் விலை அதிகரிப்பு...

ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருடன் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டரான புர்க்மேன் ஸ்ட்ரீட்-ன் எக்ஸ்ஷோரூம் விலையையும் சுசுகி நிறுவனம் அதிகரித்துள்ளது. சுசுகி மட்டுமின்றி 2 மாத கால ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிக்கும் விதமாக ஹீரோ, ஹோண்டா, கேடிஎம், டிவிஎஸ், ராயல் எண்ட்பீல்டு மற்றும் யமஹா நிறுவனங்களும் தங்களது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் விலைகளை கணிசமாக உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
India’s Most Popular 125cc Scooter, Suzui Access 125 BS6 Is Now More Expensive
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X