புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வசதி செயலி மூலமாக என்னென்ன வசதிகளை பெற முடியும், இந்த மாடல்களின் விலை என்ன என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்ஃபோனை இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் புளூடூத் மூலமாக இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

சுஸுகி ரைடு கனெக்ட் என்ற பெயரில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

புதிய சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை ஸ்மார்ட்போனில் உள்ள சுஸுகி ரைடு கனெகெட் செயலி மூலமாக இணைத்துக் கொண்டால், பல்வேறு வசதிகளை பெற முடியும்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்ஃபோனுக்கு வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் தகவல்கள் குறித்த தகவல்களை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

அதேபோன்று, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியையும் இந்த ஸ்கூட்டர்களின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கும். இதனால், கவனம் பிறழாமல் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பை பெற முடியும். எவ்வளவு நேரத்தில் சென்றடைய முடியும் என்ற தகவலையும் பெறலாம்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

சுஸுகி ரைடு கனெக்ட் செயலி மூலமாக வேக வரம்பை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு மேல் வேகமாக செல்லும்போது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக எச்சரிக்கை தரும்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

அதேபோன்று, கடைசியாக எந்த இடத்தில் ஸ்கூட்டரை பார்க்கிங் செய்திருக்கிறோம் என்ற தகவலையும் இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெற முடியும். மேலும், எங்கிருந்து எங்கு செல்கிறோம் என்ற பயணம் தொடர்பான வரைபட தகவலையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இயலும்.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

புளூடூத் இணைப்பு வசதியை தரும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்ட சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருக்கு ரூ.84,600 டெல்லி எக்ஸ்ஷோரூம் நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் வந்த சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள்!

அதேபோன்று, புளூடூத் இணைப்பு வசதி கொண்ட சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரின் டிரம் பிரேக் மாடலுக்கு ரூ.77,700 விலையும், டிஸ்க் பிரேக் மாடலுக்கு ரூ.78,600 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் மாடல்கள் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Suzuki Burgman and Access 125 Scooters has received Bluetooth enabled digital console for Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X