சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

சுஸுகி டூ-விலர்ஸ் இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக இதுவரை சுஸுகி நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்திய சாலையில் சுஸுகியின் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உடன் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் இந்தியா டூடே செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ளன.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

இந்த ஸ்பை படங்களில் சோதனை ஸ்கூட்டர்கள் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாததால், அவை சுஸுகியின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடல்கள் என்பதை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இருப்பினும் இன்னும் நெருக்கமாக பார்த்தால் தான் அவை எலக்ட்ரிக் வெர்சன்கள் என்பது தெரிகிறது.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

சோதனை ஸ்கூட்டர் மறைப்புகளால் மறைக்கப்படவில்லை என்றாலும், சுஸுகி மற்றும் பர்க்மேன் மாடலின் முத்திரைகள் மறைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படவில்லை, இதை வைத்துதான் இந்த ஸ்கூட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்று நாங்கள் கூறுகிறோம்.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

அதேபோல் இருசக்கரங்களுக்கு மேற்புறத்தில் சஸ்பென்ஷன் அமைப்பும் வழக்கமான பர்க்மேனில் இருந்து வேறுபடுகிறது. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் சக்கரத்தை அணைத்து கொள்ளும் செட்அப்-ஐ பார்க்க முடிகிறது. இவற்றை தவிர்த்து பார்த்தோமேயானால், இந்த சோதனை ஸ்கூட்டரின் தோற்றம் சுஸுகியின் பர்க்மேன் ஸ்கூட்டரை தான் ஒத்து காணப்படுகிறது.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

ஏற்கனவே கூறியதுதான், இந்திய சந்தையின் எதிர்காலத்திற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதையும் தயாரித்து வருவதாக சுஸுகி டூ-வீலர்ஸ் நிறுவனம் இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. நம் நாட்டு சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் ஐக்யூப் மற்றும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன.

சுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்

ஏத்தர் பிராண்ட்டும் வேகமாக பிரபலமாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஆக உள்ளது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.15 லட்சம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.49 லட்சமாக உள்ளன.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

இத்தகைய விற்பனை மாடல்களாலும், இந்த சோதனை ஓட்டத்தினாலும் விரைவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய அறிவிப்பை சுஸுகி நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் மாடலில் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
New Suzuki Burgman Street Based Electric Scooter Spotted Testing In India: To Rival The TVS iQube
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X