மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் சுசுகி... நம்பக்கூடிய தகவல் வந்தாச்சி..

இந்திய சந்தைக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

இந்த நிலையில் தயாரிப்பு பணியில் உள்ளதாக கூறப்படும் சுசுகியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய நம்பக்கூடியதான தகவல் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சுசுகி நிறுவனம் ஸ்டீல் ஃப்ரேமில் எளிமையான கட்டமைப்பில் உருவாக்கி வருவதை வெளிக்காட்டுகின்றன.

மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் சுசுகி...

படத்தில் காட்டப்பட்டுள்ள ஃப்ரேமின் டிசைனில் ஸ்கூட்டர் தயாரிக்கப்படுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்பே உள்ளது. இருப்பினும் குறைந்த செலவில் விறைப்பு தன்மையை மேம்படுத்த இந்த ஃப்ரேம்கள் அழுத்தப்பட்ட-எஃகுகளால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சதுர வடிவிலான பேட்டரி இருக்கைக்கு அடியில் எளிதில் நீக்கக்கூடியதாக வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் சுசுகி நிறுவனம் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி வழிமுறையை பின்பற்றவுள்ளதை அறிய முடிகிறது. இந்த பேட்டரி, வழக்கமான பெல்ட் மூலமாக இயக்க சக்கரத்துடன் இணக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாருக்கு மேற்புறத்தில் பொருத்தப்படவுள்ளது. அனைத்து எலக்ட்ரானிக் கண்ட்ரோல்களும் ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு ஓட்டுனர் கால் வைக்கும் ஃப்ளோர்போர்டிற்கு அடியில் வழங்கப்படவுள்ளது.

மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் சுசுகி...

தற்போது வெளியாகியுள்ள சுசுகியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் காப்புரிமை படங்கள் இந்த ஸ்கூட்டரில் விலை குறைவான சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்படவுள்ளதையும் சுட்டி காட்டுகின்றன. ஏனெனில் சுசுகி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மலிவான விலையில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் விலையுடன் ஒப்பிடும்போது இதன் செயல்திறனை சிறப்பானதாக எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியாகி இருந்த தகவலில், இந்த ஆண்டில் சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யவுள்ளதாகவும், சோதனைகள் முடிந்த பின் அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் சுசுகியின் இந்த திட்டங்களை தாமதப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் மொத்த ஆட்டோமொபைல் துறையையும் முடக்கி உள்ளது. இருப்பினும் திட்டமிட்டதுபோல் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021ல் இந்திய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான மார்க்கெட் தற்போது தான் சிறிது சிறிதாக உருவாகி வருகிறது. அதிலும் சுசுகியின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மலிவான விலையில் அறிமுகமாகவுள்ளதால் நிச்சயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விரும்புவோரை கவரும்.

Most Read Articles
English summary
First details of Suzuki electric scooter for India revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X