சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் ஜிக்ஸெர் வரிசை பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

உலகளவில் சுஸுகி பிராண்ட் தனது 100வது ஆண்டுநிறைவு நாளை விரைவில் கொண்டாடவுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது புதிய பெயிண்ட் அமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

இந்த புதிய பெயிண்ட் அமைப்புகளை இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள ஜிக்ஸெர் 155 மற்றும் ஜிக்ஸெர் 250 என்ற இரு பைக் மாடல்களுமே பெறுகின்றன. இவ்விரண்டிற்கும் வழங்கப்பட்டுள்ள இரு பெயிண்ட் அமைப்புகளும் தற்போதைய பெயிண்ட் அமைப்புகளின் தரத்தில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

இதனால் பைக்கின் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. இந்த வகையில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப் 250 பைக் புதியதாக ட்ரிட்டோன் நீலம்/சில்வர் நிற தேர்வை பெற்றுள்ளது. இந்த பாராம்பரியமான நீலம் மற்றும் கற்பலகையின் சில்வர் வண்ண கிராஃபிக்ஸ் 1960களில் இருந்த சுஸுகியின் முந்தைய க்ராண்ட் ப்ரிக்ஸ் மெஷின்களை நினைவுக்கூறும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.76 லட்சமாக உள்ளது. இதன் நாக்டு வெர்சனான ஜிக்ஸெர் 250 அப்டேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் உடன் மெட்டாலிக் ட்ரிடோன் நீல ஷேட்-ஐ பெற்றுள்ளது. தற்போதுள்ள ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்புடன் இந்த புதிய ஷேட்-ஐ பெற்றுள்ள ஜிக்ஸெர் 250-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.65 லட்சம் என்ற அளவில் உள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

இவற்றுடன் சுஸுகியின் எண்ட்ரீ-லெவல் ஜிக்ஸெர் 155 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப்155 பைக்குகளும் புதிய நிறத்தேர்வை பெற்றுள்ளன. இவை இரண்டும் இனி முறையே புதிய பேர்ல் மைரா சிவப்பு மற்றும் மெக்ட்டாலிக் ட்ரிட்டோன் நீலம் என்ற நிறங்களிலும் கிடைக்கும்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

இவற்றில் ‘ஜிக்ஸெர்' என்ற கிராஃபிக்ஸ் சற்று தடிமனாக வழங்கப்பட்டிருப்பதுதான் இவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள கிராஃபிக்ஸ் அப்டேட் ஆகும். ரூ.1.14 லட்சம் மற்றும் ரூ.1.24 லட்சம் என்பது இவை இரண்டின் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலைகளாகும்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

100வது ஆண்டுநிறைவு விழாவை முன்னிட்டு இந்த புதிய நிறத்தேர்வுகளை அறிமுகப்படுத்துவதை குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் கூறுகையில், கடந்த ஜூலை முதல் 2020ஆம் ஆண்டிற்கான மோட்டோ ஜிபி மீண்டும் தொடங்கப்பட்ட பின்னரில் இருந்து ட்ரைடன் ப்ளூ/ சில்வர் நிறத்தை ஜிக்ஸெர் எஸ்.எஃப் 250-ல் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ நிறத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் ஜிக்ஸெர் 250 காட்டப்பட்டது. அப்போதுதான் நுகர்வோரின் நேர்மறையான பதிலை கணக்கிட்டோம். அதன்பின்னரே இந்த நிறங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

ஜிக்ஸெர் எஸ்.எஃப் மற்றும் ஜிக்ஸெர் மாடல்களில் புதிய பெரிய ‘ஜிக்ஸெர்' கிராஃபிக் அறிமுகப்படுத்துவது, மோட்டார் சைக்கிள் வாங்கும் போது வாடிக்கையாளருக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் ஒத்த விருப்பங்களை வழங்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தின் வெளிப்பாடே ஆகும் என கூறினார்.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...

இந்த புதிய பெயிண்ட் அமைப்புகள் சுஸுகியின் ஜிக்ஸெர் பைக்குகளுக்கு கணக்கச்சிதமாக பொருந்துகின்றன. குறிப்பாக ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 பைக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரேசிங் பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட கிராஃபிக்ஸ் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.

Most Read Articles

English summary
Suzuki Gixxer 155 And 250 Series Get New Colours For Brand's 100th Anniversary Celebrations
Story first published: Friday, October 2, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X