நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் ஜிக்ஸெர் வரிசை பைக்குகளுக்கு புதிய நிறங்களை விரைவில் வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டீசரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்தில் #பெருமையின்பிறப்பு என்ற ஹாஸ்டேக் உடன் புதிய நிறங்கள் விரைவில் வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

இந்த புதிய நிறங்கள் ஜிக்ஸெர் பிராண்டின் 100வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்க வெளிவருகின்றன. சுஸுகி ஜிக்ஸெர் வரிசையில் தற்சமயம் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் பெயர்களில் 155சிசி மற்றும் 250சிசி பைக்குகள் என மொத்தம் நான்கு மோட்டார்சைக்கிள்கள் உள்ளன.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

இவற்றில் 155சிசி மற்றும் 249சிசி என்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. மற்றப்படி ஜிக்ஸெர் பைக்குகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய நிறங்கள் குறித்த வேறெந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

சுஸுகி இந்த புதிய நிறங்களை அதன் அனைத்து ஜிக்ஸெர் பைக்குகளுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் எந்தெந்த ஜிக்ஸெர் பைக்குகள் புதிய நிற ஷேட்களை பெறவுள்ளன என்பது குறித்த விபரத்தையும் சுஸுகி வெளியிடவில்லை.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

எண்ட்ரீ-லெவல் சுஸுகி ஜிக்ஸெர் ஆனது கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படுகிறது. கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மோட்டோ ஜிபி என்ற மூன்று வண்ணங்களில் ஜிக்ஸெர் எஸ்எஃப் விற்பனை செய்யப்படுகிறது.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

மறுபுறம், ஆற்றல்மிக்க சுஸுகி ஜிக்ஸெர் 250 இரு ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்புகளில் கிடைக்கிறது. அதேநேரம் முதன்மையான எஸ்.எஃப் 250 பைக்கானது மோட்டோ ஜிபி எடிசன் உட்பட மூன்று நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த புதிய நிறங்கள் இந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம்.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

இந்த வகையில் புதியதாக வழங்கப்படவுள்ள பெயிண்ட் அமைப்புகள் ப்ரீமியம் தரத்தில் இருந்தாலும், ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக்கிற்கு மட்டும் வழங்கப்படும் மோட்டோ ஜிபி எடிசனை காட்டிலும் சற்று குறைவான ப்ரீமியம் தரத்திலேயே இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...

155சிசி என்ஜினை கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மற்றும் ஜிக்ஸெர் எஃப்ஐ (ஃப்யூல்-இன்ஜெக்டட்) பைக்குகளின் விலைகள் எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.1,12,141 மற்றும் ரூ.1,15,078 என்ற அளவில் உள்ளன. அதுவே 250சிசி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்குகள் ரூ.1,61,336 மற்றும் ரூ.1,72,992 என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றிற்கு விரைவில் வழங்கப்படவுள்ள புதிய பெயிண்ட் அமைப்பு நிச்சயம் இவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்தும்.

Most Read Articles

English summary
Suzuki Gixxer Range To Recieve New Colours: Teaser Released
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X