மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

மோட்டோஜீபி பைக் பந்தயத்தில் வெற்றி பெற்ற தனது அணி வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஸ்பெஷலான ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் சூப்பர் பைக்கை சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

2020ம் ஆண்டு மோட்டோஜீபி பந்தயத்தில் சுஸுகி நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக, தனித்துவமான ஸ்டிக்கர் அலங்காரம் கொண்ட ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் பைக்கை சுஸுகி வெளியிட்டுள்ளது.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் லெஜென்ட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. கடந்த 1976ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை மோட்டோஜீபி பந்தயங்களில் சுஸுகி அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் பயன்படுத்திய பைக்குகளின் வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் வந்துள்ளது.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

1976 மற்றும் 77ம் ஆண்டுகளில் மோட்டோஜீபி பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்ற சுஸுகி அணி வீரர் பேரி ஷீனி, 1981ம் ஆண்டு வெற்றி பெற்ற மார்கோ லூசினெல்லி, 1982ல் சாம்பியன்பட்டம் பெற்ற பிரான்கோ உன்சினி, 1993ம் ஆண்டு சாம்பியனான கெவின் ஷ்வான்ட்ஸ், 2000ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற கென்னி ராபர்ட்ஸ் ஜூனியர் மற்றும் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற ஜோன் மிர் ஆகியோர் பயன்படுத்திய பைக்குகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய ஸ்பெஷல் மாடலில் பல வண்ணத் தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

அதாவது, புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் பைக் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் இந்த பைக் வந்துள்ளது. இந்த பைக்கில் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு மற்றும் பிலியன் ரைடர் கவுல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

இதுதவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 118 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட் சிஸ்டம் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000ஆர் லெஜென்ட்ஸ் எடிசன் மாடலில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், ரைடு பை ஒயர் சிஸ்டம், மூன்று ரைடிங் மோடுகள், 10 மோடு டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சுஸுகி லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

மோட்டோஜீபி சாம்பியன்களை கவுரவிக்க ஸ்பெஷல் சூப்பர் பைக்கை வெளியிட்ட சுஸுகி!

இந்த பைக்கில் முழுமையான எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்எக்ஸ்-ஆர்ஆர் மோட்டோஜீபி ரேஸ் பைக்கில் இருப்பது போன்ற தகவல்களை பெற இயலும். ஹேண்டில்பாரில் உள்ள சுவிட்சுகள் மூலமாக இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை கட்டுப்படுத்த முடியும்.

Most Read Articles

English summary
Suzuki Motorcycles has unveiled the GSX-R 1000R Legend Edition globally. The limited-edition motorcycle will pay homage to all the Suzuki MotoGP championships won over the years. The new motorcycle has been launched to commemorate its victory of the 2020 MotoGP championship.
Story first published: Saturday, December 26, 2020, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X