கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது தாயகமான ஜப்பான் நாட்டு சந்தையில் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 பைக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 125சிசி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த புதிய பைக்கை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

சர்வதேச சந்தையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு 125சிசி மற்றும் 150சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த பெரும்பான்மையான அனைத்து முன்னணி நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் கேடிஎம் மற்றும் யமஹா நிறுவனங்கள் தங்களது ட்யூக் மற்றும் எம்டி வரிசையில் 125சிசி மற்றும் 150சிசி பைக்குகளை களமிறக்கி வருகின்றன.

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

இதில் மேலும் சில நிறுவனங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டார்சைக்கிளின் மூலமாக எண்ட்ரீ-லெவல் மோட்டார்சைக்கிள்களின் லைன்-அப்பை விரிவுப்படுத்தியுள்ளது. சுசுகியின் இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி சிங்கிள்-சிலிண்டர் ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 14.8 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இதன் விலை ஜப்பான் சந்தையில் 393,800 யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2.77 லட்சமாகும்.

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக்கில் இருந்து சஸ்பென்ஷன், ப்ரேக் போன்ற மெக்கானிக்கல் பாகங்களை இந்த புதிய 125சிசி பைக் பெற்றிருந்தாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலான டிசைன் மொழி, அந்த பைக் உள்பட ஜிஎஸ்எக்ஸ்-ஆர்150 போன்ற இதன் பெரிய அளவிலான முன்னோடி மாடல்களை காட்டிலும் மிகுந்த வரவேற்பை சந்தையில் பெற்று தரும் வகையில் உள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

இதன் டிசைனில் முக்கிய அம்சங்களாக நேர்த்தியான வடிவம், முழு எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலின் ஃப்யூல் டேங்க், மேற்புறமாக வளைக்கப்பட்ட பின்புற பகுதி மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, நீல நிறத்தில் அலாய் சக்கரங்கள், ஜிஎஸ்எக்ஸ்-ஆர் ஸ்டிக்கர் உடன் கம்பீரமான சுசுகி கிராஃபிக்ஸ், நீண்ட விண்ட்ஸ்க்ரீன், கருப்பு நிறத்தில் முன்புற மற்றும் பின்புற ஃபெண்டர்கள் மற்றும் முன்புறத்தில் ஹெட்லேம்பிற்கு அருகே பொருத்தப்பட்ட கண்ணாடிகள் உள்ளிட்டவை உள்ளன.

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

இவை தவிர்ந்து இந்த பைக்கில் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், டச்சோ, கடிகாரம், கியர் பொஷிசன் இண்டிகேட்டர் மற்றும் ஃப்யூல் கேஜ் உடன் உள்ள முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்ற தொழிற்நுட்ப வசதிகளும் உள்ளன.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

கேடிஎம் ஆர்சி125 பைக்கிற்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகபடுத்தியது சுசுகி...

இந்திய சந்தையில் ஏற்கனவே சுசுகி நிறுவனம் ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இவற்றை தொடர்ந்து எதிர்காலத்தில் இந்தியாவிற்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை கேடிஎம் ஆர்125 பைக்கிற்கு போட்டியாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki GSX-R125 (KTM RC125 Rival) Launched; Likely India-Bound
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X