சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்..

சீனாவில் அடுத்த வாரத்தில் ஹொஜுக்கே டிஆர்300 என்ற பெயரில் அறிமுகமாகவுள்ள சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக் வீடியோ ஒன்றின் மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்து இந்தியன்ஆட்டோஸ்ப்ளாக் செய்தி தளம் வெளியிட்டுள்ள முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 300சிசி பைக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் முழு-எல்இடி ஹெட்லேம்ப், நேர்த்தியான வடிவில் ஹெட்லைட் கௌல், பெரிய மற்றும் கவர்ச்சிகரமான டேங்க் ஸ்கூப்களுடன் 16-லிட்டர் மஸ்குலர் எரிபொருள் டேங்க், நீட்டிக்கப்பட்ட பின்புற பகுதி மற்றும் கண்கவரும் எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை உள்ளன.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

முதன்முதலாக 2018ல் நடைபெற்ற சோங்க்கிங் மோபோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த 300சிசி ட்வின்-சிலிண்டர் மோட்டார்பைக்கை பற்றிய முக்கியமான தகவல்களை கூறும் விதமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சில நேரலை படங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டு இருந்தன.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

அதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் வீடியோ க்ளிப் ஒன்றின் மூலமாக இந்த பைக்கின் எக்ஸாஸ்ட்டின் தன்மை குறித்து தெரிய வந்திருந்தது. இந்த நிலையில் தற்போது சீன அறிமுகத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் சிறப்பம்சங்களாக தள்ளு மற்றும் இழுக்கக்கூடிய த்ரோட்டல் கேபிள், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பக்கவாட்டில் ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட், படிக்கட்டு வடிவிலான இருக்கை அமைப்பு, கவர்ந்திழுக்கக்கூடிய அலாய் சக்கரங்கள், யுஎஸ்பி சார்ஜிங், பேக்லிட் ஸ்விட்ச்கியர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

சஸ்பென்ஷனிற்கு கேஒய்பி-ன் கோல்டன் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்ஸ் மற்றும் 7-நிலை ப்ரீலோடு-அட்ஜெஸ்ட்டபிள் ரியர் மோனோஷாக் உள்ளிட்டவையும், ப்ரேக்கிங் பணிக்கு முன்புறத்தில் ட்யூல்-பிஸ்டன் காலிபர் உடன் 298மிமீ பெடல் டிஸ்க்கும், பின்புறத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் அளவில் சிறிய பெடல் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

இவற்றுடன் ட்யூல்-சேனல் போஸ்ச் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கில் 298சிசி ட்வின்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜினை சுசுகி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 29.23 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 27.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 பைக்கின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... ஜூன் 16ல் சீனாவில் அறிமுகம்...!

சிறப்பான குறைந்த மற்றும் இடைப்பட்ட செயல்திறனிற்காக ட்யூன் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜின் உதவியுடன் சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்300 மாடல் 32.8 km/l எரிபொருள் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹொஜுக்கே என்ற பெயரில் சீனாவில் அறிமுகமாகும் இந்த பைக்கின் விலை அங்கு 33,000-35,000 யென்-ஆக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 3,49,200- 3,70,364 ஆகும்.

Most Read Articles
English summary
Suzuki GSX-S300 (Haojue DR300) officially revealed, to be launched on 16 June
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X