ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

சுசுகி மோட்டார்சைக்கிளின் புதிய தயாரிப்பான இண்டூரர் 250ன் புதிய டீசர் படத்தை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள சுசுகி மோட்டார்சைக்கிள் அடுத்ததாக இண்டூரர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

இந்த நிலையில் சவாரி செய்ய ‘ஒரு உயர்ந்த வழியை அறிமுகப்படுத்துகிறோம்' என்ற வசனங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் பைக்கை பற்றிய வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் புதிய இண்டூரர் 250-ஐ வருகிற அக்டோபர் 7ஆம் தேதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது நமக்கு தெரிந்ததுதான்.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

இந்த டீசர் படத்தை சற்று உற்று பார்த்தால் ‘ஒரு உயர்ந்த வழியை அறிமுகப்படுத்துகிறோம்' என்ற வாசகம் சுசுகி ஜிக்ஸெர் மற்றும் இண்டூரர் பைக்குகளில் பொருத்தப்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் வடிவத்திற்குள் அடைப்பட்டது போல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜிக்ஸெர் வரிசையில் ஏற்கனவே 155சிசி மற்றும் 250சிசி பைக்குகள் உள்ளதால் இந்த டீசர் மிகுந்த எதிர்பார்ப்புகுள்ளாகி உள்ள இண்டூரர் 250 பைக்கை தான் குறிக்கிறது. முன்னதாக ஜூலையில் இந்த 250சிசி பைக்கின் காப்புரிமை படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

தற்சமயம் விற்பனையில் உள்ள இண்டூரர் பைக்கில் 155சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் அமைப்பு தான் ஜிக்ஸெர் 155 பைக்கிலும் வழங்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி இந்த இரு 155சிசி பைக்குகள் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்டவையையும் பகிர்ந்து கொண்டுள்ளன.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

ஜிக்ஸெர் 250 பைக் விற்பனையில் உள்ளதால் இண்டூரர் 250-ஐ அறிமுகப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்று சுசுகி நிறுவனம் நினைத்துவிட்டது போலும். இந்த வகையில் இண்டூரர் 250-ல் சிங்கிள்-சிலிண்டர் 249சிசி ஆயில் கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9300 ஆர்பிஎம்-ல் 26.5 பிஎச்பி பவரையும், 7300 ஆர்பிஎம்-ல் 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இவற்றுடன் ஸ்டார்டர் சிஸ்டம் ஆனது எலக்ட்ரிக் ஆக வழங்கப்படவுள்ளது.

அதுவே இண்டூரர் 150-ல் பொருத்தப்படுகின்ற என்ஜின் 14.8 பிஎச்பி மற்றும் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் அமைப்புகளை தவிர்த்து பரிணாம அளவுகளில் இண்டூரர் 250சிசி பைக்கிற்கும் 155சிசி பைக்கிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

இதனால் இண்டூரர் 155-ன் 2130மிமீ நீளம், 805மிமீ அகலம் மற்றும் 1095மிமீ உயரத்தில் தான் இண்டூரர் 250 பைக்கும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் தரையில் இருந்து இருக்கையின் உயரம் 740மிமீ-லும், வீல்பேஸ் 1405மிமீ-லும், க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 170மிமீ-லும், பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 11 லிட்டரிலும் இருக்கும்.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

இண்டூரர் 250 பைக்கின் கெர்ப் எடை 165 கிலோவில் வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற க்ருஸர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியாவில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால்தால் சுசுகி மட்டுமின்றி ஹோண்டா மோட்டார்சைக்கிளும் ஹைனெஸ் என்ற பெயரில் புதிய க்ரூஸர் பைக்கை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..?

ஆனால் எப்படியிருந்தாலும் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் கிளாசிக், புல்லட் மற்றும் தண்டர்பேர்டு பைக் மாடல்கள் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக 2018ல் ஜாவா பிராண்ட்டும் அவென்ஜெர் மூலமாக பஜாஜும் க்ரூஸர் பைக் பிரிவில் நுழைந்தாலும் ராயல் என்பீல்டை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

Most Read Articles

English summary
Suzuki Intruder 250 Launch Teased For 7th Oct? – Bajaj Avenger Rival
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X